பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

57 |  வெள்ளியங்காட்டான் 

</

__________

57 | வெள்ளியங்காட்டான் அனுபங்களை - உண்மைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு வாழும் வாழ்க்கை; அதன் விளைவு மகிழ்ச்சிகரமானதல்ல.

பயிரை வளரவிடாமல் களை தடுக்கிறது. களை பறிக்க உழவன் தயங்கினால் பட்டபாடு வீணாகிவிடும். வாழ்கை என்ற பயிரில் அச்சமும் கவலையும் ுபெரும், அவற்றை களைத்தெறி! நிச்சிந்தையாயிரு! மனதை அலட்டிக் கொள்ளாதே.

நான் இன்று காலையில் ஹரீந்திரநாத் சட்டோத் பாத்யாயா எழுதிய கூண்டுக்கிளி முதலிய நாவல்களைப் படித்து, கொண்டிருந்தேன். அதில் 'காவலன் தீபம்' என்ற ஒரு நாடகம். அதில் ஒரு கவிஞன், ஒரு வர்தகன், ஒரு தொழிலாளி மூன்று பிரதான பாத்திரங்கள். மூன்று பெரும் சிறைக் கைதிகள்கூட, அதில் ஒரு சம்பாசனை. கவிஞன் - “இப்போதுகூட நீ கடவுளை ஏற்கவில்லையா?” 'தொழிலாளி:- நான் அதை ஏற்கமாட்டேன். கோழைகளுக்குத்தான் கடவுள் என்ற ஆறுதல் வேண்டும். அதை நான், தூவென வெறுக்கிறேன். நண்பா! இயற்கை அதிசயத்தால் நீ திரும்பவும் ஒரு கலியனாக இம்மண்ணில் பிறந்தால், அறிவு தெளிந்த நெஞ்சுரம் படைத்த நாஸ்திகனாகப் பிறக்க வேண்டுமென்பதே என் ஆசை.

       கவிஞன்:- நீ இவ்வளவு அவமதிப்பாய் கடவுளைப் பற்றி, இந்தத் துன்ப நேரத்திலும் பேசுகிறாயே உனக்கு அச்சமாக இல்லையா? மன்னிக்கும்படி அவரிடம் நீ கேட்டுக் கொள்ள மாட்டாயா?”
       தொழிலாளி:- தோழா! கடவுள் என்று ஒருவன் இருந்தால், அவன்தான் கோடிக்கணக்கான தொழிலாளர்களான எங்கள் முன்னே - மண்டியிட்டு, கோடிகோடி தடவைகள் மன்றாடி மன்னிப்புக் கேட்கவேண்டும். அப்படிச் செய்தும் எங்கள் மன்னிப்பைப் பெறத் தனக்கு யோக்யதை இல்லை யென்று அவன் மனமுருகவும் வேண்டும். பன்னூற்றாண்டுகளாய் எங்களின் - தொழிலாளிகளின் பாத்தத்தைப் பிழிந்து, துன்புறுத்திக் காலால் மிதித்து