பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

56 |  ஒரு கவிஞனின் இதயம்

கிழவனாகிவிட்டது போன்ற ஒருவிதச் செயலற்ற தன்மை என்னிடம் தலைகாட்டுகிறது. இது ஒருவிதப் பொய்த்தோற்றமாகவே இருக்கலாம். நான் செய்ய வேண்டியவைகள் இன்னமும் ஒரு சில காரியங்கள் இருக்கவே இருக்கின்றன. அவற்றைச் செய்து முடிக்கவே என் மனம் சதா துளைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஈடுபட இயலாத சூழ்நிலையில் எனக்குக் கோபம் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்துக்கொள்ள நான் அசக்தனாகவும் இருக்கிறேன்.

       நான் இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போது அருகில் சின்னக்குழந்தை பாயின் மேல் படுத்தபடி அழுது கொண்டிருக்கிறது. ஆனால் அதனுடைய அழுகைக்குக் காரணம் பசியல்ல; தூக்கமும் அல்ல; நோய் நொடி எதுவும் இல்லை. நல்ல ஆரோக்கியமான நிலையில் அது அழுகிறது. அவனுக்கு வயது 1 மாதமும் 16 நாளும் ஆகிறது.
      அவன் முயல்கிறான் மல்லாந்து படுத்த நிலையை வெறுத்துக் குப்புறப்படுக்க விரும்புகிறான். வயது போதாத காரணமாக அவனுடைய விருப்பம் நிறைவேறுவதில்லை. அவனுடைய அழுகை அவனுக்கு உதவுவதில்லை. ஆயினும்  கொண்டேயிருக்கிறான். ஓயாது முயல்கிறான். அவனுடைய முயற்சி வெற்றி பெறாத காரணமாக அவன் தேம்பல் அழுகையாக வெடிக்கிறது. 
       இப்பொழுது குழந்தையுடன் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறேன். என்னை யறியாமல் எனக்குச் சிரிப்பு வருகிறது. எனக்கும் குழந்தைக்கும் வயது வித்தியாசம் தவிர மனப்பான்மை ஒன்றாகவே இருக்கிறது. ஆம், நானும் இன்னமும் ஒரு குழந்தைதான்.
       அருமை மகளே! வாழ்க்கை என்பதுதான் என்ன? ஆம், அது ஒரு இடையுறாத முயற்சி. மனதில் அச்சமோ கவலையோ இன்றி சதா இயங்கிக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. அச்சமும், கவலையும் வாழ்க்கையைக் கோனலாக்கிவிடும். நம்மை மறந்து விட்டுப் பிறரைப் பார்த்து நாம் வாழக்கூடாது. நம்முடைய கண்களை மறந்து விட்டு, நம்