பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

62 |  ஒரு கவிஞனின் இதயம்

என் அன்புச் செல்வமே என்னைப்பற்றிய ஒரு இரகசியம் இன்று உன்னுடன் சொல்ல விரும்புகிறேன். அஃதாவது, நான் யாருடைய வயிற்றில் பிறந்திருக்கக்கூடாதோ அவர்கள் வயிற்றில் பிறந்தேன். இது என் முதல் தவறு. இரண்டாவது, நான் எந்த இடத்தில் வசித்திருக்கக்கூடாதோ அந்த இடத்தில் வசித்தேன். மூன்றாவது, எது செய்யக் கூடாதோ அதையே இன்றுவரை செய்தும் வருகிறேன்.

இது என் வாழ்வில் பயங்கரமான இரகசியம்.

உன் அன்னை இருந்தவரையில் எனக்கு உற்ற துணைவியாக இருந்தாள். என் சறுக்கலில் அவள் ஊன்றுகோலாக விளங்கினாள். என் முன்னேற்றத்தில் ஒரு நல்ல ஏணியாக இருந்து உதவினாள். அதை இப்போதுதான் உணர்கிறேன். ஆனால, இன்று அந்த உறுதுணை இல்லை. ஊன்றுகோல் இல்லை. தளர்ந்த உடலுடன் தள்ளாடும் நிலையில் இன்றும் அந்தச் செய்யக் கூடாத செயலைச் செய்யவே, சாதிக்க இயலாத அந்த ஒன்றைச் சாதிக்கவே என் மனம் விரும்புகிறது.

ஆனால், என் விருப்பம் எவ்வாறு நிறைவேறும்? என் குறிக்கோள், கோட்பாடு இடைவிடா முயற்சி, மனோ வேகம் அனைத்தும் சிறுகச் சிறுக என்னை விட்டு விலகிக் கொண்டு வரும் இந்த நிலையில் என் காவியம் இயற்றும் ஆவல் எவ்வாறு வெற்றியுறும்? எந்த விதமான பற்றும் பாசமும் எனக்குக் கிடையாது. எதையாவது ஒன்றைப் பற்றினாலன்றி எதிலாவது ஒன்றில் பாசம் வைத்தாலன்றி நான் எதை எழுதுவது? ஆனால், இவ்வளவும் இன்றுள்ள சூழ்நிலை - இன்றுள்ள மனநிலை. நான் நினைப்பதுபோல் ஒரு நல்ல வாய்ப்பு என் எதிர்காலத்தில் ஏற்படுமானால் அன்று என் காவியத்தை எழுதவே செய்வேன். அன்று தான் உன் விருப்பம் போல உனக்கும் என் காவியத்தில் ஒரு பாத்திரம் இருக்கும். ஆனால் அது நிராசையே. இது நிற்க. உன் குழந்தையைப் பற்றி நான் உன் கடிதத்திலிருந்து ஒருவாறு அறிந்து மகிழ்கிறேன். அந்தச் சிறு குழந்தையால் உன் வாழ்வு நிறைவாகுக என்று வாழ்த்துகிறேன். அக்காளின் முந்திய கடிதத்தில் குழந்தை