பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64 |  ஒரு கவிஞனின் இதயம்

 | 13.02.1961 இரத்தினபுரி காலனி

அடிக்கடி கடிதம் எழுது

அன்புச் செல்வி,

சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் என்னளவில் மிகவும் செளகர்யமாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதிகமாகப் படிக்கவே மனம் விரும்புகிறது. எழுத வேண்டியும் இருக்கிறது. நேரத்திற்கு சமையலையும் கவனித்துக் கொள்ளவேண்டும். இவ்வளவும் செயது கொண்டுதான் வருகிறேன். ஆனால், இந்த எட்டு நாட்களாக படுக்கையில் விழுந்து கிடக்கவேண்டியும் நேரிட்டது.

விசயம் இதுதான் என் பழைய செருப்புகளுக்கு என்மேல் அளவு கடந்த கோபமும் வெறுப்பும் இருப்பதை அறியாமல் தொடர்ந்து அதை மிதித்துக் கொண்டிருந்தேன். 6.3.63 தேதி பட்டுக்கோட்டைக்குப் போகவேண்டி வந்தது. அது சமயம் பார்த்து என்மேல் பலமாக வஞ்சம் தீர்த்துக் கொண்டுவிட்டன பழைய செருப்புகள். வலது கால் பெருவிரல் ரணமாக்கி விட்டது. என்னென்ன