பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80 |  ஒரு கவிஞனின் இதயம்


ஒரு கவிஞனின் இதயம்

| 16.11.1961

இரத்தினபுரி காலனி

உலகம் ஒரு நிலைக்கண்ணாடி!

அன்புச் செல்வன்,

    நலம்; நலம் விளைக! நான் இங்கு கன்னடப் புத்தகங்கள், பேப்பர்களில் தேடிப்பிடித்த ஒரு சில ரத்தினங்களை உனக்கு விற்றுவிட விரும்புகிறேன். ஒரு ரத்தினத்தின் விலை குறைந்தது 3-0-0 ரூபாயாக வைக்கிறேன். இதுவே என் முதல் வியாபாரம். உன் வரையில் கடைசி வியாபாரமும். நீ இதை வாங்கிக் கொள்ள மறுக்க மாட்டாயென்று நம்புகிறேன். எனக்கு இனி வேண்டிய பணத்தின் அளவும் இவ்வளவே, நிலத்தை உழுது பண்படுத்திய குடியானவனின் விதைத் தானியம் தேடும் முயற்சி போன்றதே என் இந்த வியாபாரமும். உன் தந்தையாகிய என்னைக் காப்பாற்று என்றோ - உதவி செய் என்றோ உன்னைக் கேட்கும் நிலைக்கு இன்னும் நான் கிழவனாகி விடவில்லை. கடனாகக் கொடு என்றே கேட்கிறேன். அதுவும் கடைசித் தடவையாகவே கேட்கிறேன் என்று நீ