பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

81 |  வெள்ளியங்காட்டான் 


அர்த்தம் செய்து கொண்டாலும் சரியே. எப்படியாவது எனக்குக் கொஞ்சம் பணம் தேவை. இங்கு என் நண்பர்கள் மூலம் இதை நான் சரி செய்து கொள்ள முடியும். எனினும் அது என் சுய மரியாதையைப் பாதிக்கும். அவர்களாக மனமுவந்து செய்யும் உதவிக்கு அதிகமாக நான் அவர்களிடம் எதிர்பார்ப்பதற்கு உரிமையே கிடையாது. எனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்ற அளவு நான் இங்கு குறிக்கும் அறிவொளி வீசும் இரத்தினங்களின் எண்ணிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

      1. யாரும் சிங்கத்திற்கு அரசனென்று பட்டாபிசேகம் செய்து வைக்கவில்லை. அது தன் கம்பீரமான தோற்றம் சக்தி முதலியவைகளால்தானே மிருக ராஜா என்னும் பதவியை தேடிக்கொள்கிறது.
      2. உலகம் ஒரு நிலைக் கண்ணாடி யார் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அது அப்படியே காண்பிக்கிறது. நாம் நம் பிரதி பிம்பத்தையே அதில் காணுகிறோம்.
      3. யானை எந்த மரத்தின் நிழலிருந்து அதன் உடலலுப்பைத் தீர்த்துக் கொள்கிறதோ, அதையே பின்பு முறித்து எறிவது போல் நீசர்கள் தமக்கு ஆதாரமானவற்றையே நாசம் செய்து விடுவார்கள்.
      4. தன் மக்களுக்குக் கடன் வைத்துவிட்டுச் சாகும் தந்தையே அவர்களுக்கு பெரிய சத்துரு.
      5. நான் ஒரு தேசத்தின் தலைவனாக இருப்பதைவிட சத்தியத்திற்கு அடிமையாக இருப்பதையே மிகவும் விரும்புகிறேன்.
      6. அன்புக்கு நீங்கள் வழிகாட்டிகளன்று. நீங்கள் உண்மையில் நல்லவர்களானால் அன்பே உங்களுக்கு வழிகாட்டியாகும்.
      7. நம் துயரங்களை தீர்த்துக் கொள்ளச் சரியான வழி பிறர் துயரங்களை தீர்க்க முயலுவதே.
      8. முழங்கால்களை ஊன்றி வாழ்வதைக் காட்டிலும் கால்களால் நின்று சாவது மேல்.