பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

85 |  வெள்ளியங்காட்டான் 

________________

85 | வெள்ளியங்காட்டான் | 16.05.1962 இரத்தினபுரி காலனி நீ இன்னும் நிறையப் படிக்க வேண்டும்! I அன்புச் செல்வன்,

     உன் கடிதம் கிடைத்தது. நிகழ்ச்சி நிரலையும் கண்டேன். நீண்டகால வாழ்க்கைப் பிரயாணத்தில் பேரறிஞர் பாதையில் நீ முதல் காலடி எடுத்து வைத்திருக்கிறாய் என்பதைக் காண இறும் பூதெய்துகிறேன். உன் ஆர்வமும் முயற்சியும் மற்ற வாலிபர்களுக்கு ஒரு அரிய எடுத்துக் காட்டாக விளங்கட்டும். இந்த நல்ல துறையில் உனக்கு வெற்றியாகட்டும்.
     உன் பிரசங்க இறுதியில் கூட்டத்தின் கருத்து எவ்வாறு இருந்தது. என் பாடல்களை அவர்கள் எந்த அளவில் புரிந்து கொண்டு ரசித்தார்கள் என்பதை எழுது. வெறும் தற்புகழ்ச்சியாக இல்லாமல் மக்கள் கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த மாதம் எனக்குப் பணம் அனுப்பாவிட்டால் பரவாயில்லை. நான்