பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86 |  ஒரு கவிஞனின் இதயம்


86 | ஒரு கவிஞனின் இதயம் எப்படியாவது சமாளித்துக் கொள்ளுகிறேன். கோழிகளை விற்றதில் கொஞ்சம் பணம் கிடைத்தது. என்னைப் பற்றிய கவலை உனக்கு வேண்டாம். நீங்கள் அனைவரும் சுமூகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்கள் என்றால் அதுவே போதும்.

     வீடுமாற்றம் பற்றி என்னால் ஒன்றும் கூற முடியாது. எனினும் சரோஜினியை அனுசரித்து நடந்து கொள். எங்கு இருந்தால் சௌகர்யமோ அங்கிருப்பதுதான் நல்லது.
    குமுதாவின் போட்டோ எனக்கு அவசியம் வேண்டும். ஆனால் நீ இதில் ஏன் இவ்வாறு காலம் கடத்துகிறாய் என்பது மட்டும் புரிய மாட்டேன் என்கிறது. நளினி இன்னும் கொஞ்ச காலம் லீவில் இருந்திருக்க வேண்டும். பச்சை உடம்போடு அளவுக்கு மிஞ்சி உழைத்தால் அது நல்லதல்ல. ஆயினும் நான் என்ன செய்யமுடியும்? என்னுடைய நலத்தையே என்னால் தேடிக்கொள்ள இயலவில்லையெனில் நான் இனி யாருக்கு நன்மை செய்ய முடியும்?
   நளினி ஒரு முறை பாப்ப நாயக்கன் பாளையத்திற்கு என்னை வந்து செல்லும்படி எழுதியிருந்தாள் இது நளினி நினைப்பது போல் அவ்வளவு எளிதல்ல. இங்கு ஒரு நூறு ஜீவன்கள் என் கையை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் வாழ்கின்றன. இந்தக் கோழிக் குஞ்சுகள் மூலம் நான் இந்த உலகத்தையே காண்கிறேன். மனிதர்களிடமுள்ள அவ்வளவு இழி குணங்களும் கோழிக் குஞ்சுகளிடம் இருக்கின்றன. பொறாமை, வஞ்சகம், சண்டை, பேராசை ஒன்று கூட குறையவில்லை.
   மிளகாய்ச் செடி நட வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த வாரமே நடவு ஆரம்ப மாகிவிட்டிருக்கிறது. இனி நான் இங்கிருந்து புறப்பட்டு வர அவகாசமே இல்லை . ஆடிமாதம் கழிந்து ஒரு சமயம் வரலாமென்று நினைக்கிறேன்.
    “சம்பிரதாயத்திற்கு வெறும் பாவனைகளுக்குப் பலியாகாமல் எல்லாவற்றையும் தர்க்கரீதியென்ற வெளிச்சத்தில் வைத்து ஆராய வேண்டும். தள்ளுவதைத்