பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊருக்கு அவலாகி...

103



திட்டுக்குக்கீழே, பிரத்யேகமான கண்ணாடி கிளாசில், ஒரு 'கப்' மயை உறிஞ்சிக்கொண்டிருந்த சின்னான். காத்தமுத்துவை ஆச்சரியமாகப் பார்த்தான். "திண்ணையில ஏறி உட்காரலாமா?" என்றுகூட 'தமாஷாக' நினைத்துக் கொண்டான்.

ஒருசமயம், அவன் கீழே உட்கார்ந்திருந்தபோது, மழை அதிகமாகி, அவன் உடம்பை நனைத்ததும், மேல் ஜாதிக்காரர்கள் உட்கார்ந்திருக்கும் இதே திண்ணையில் தொடையைச் சாய்த்துக்கொண்டு நின்றான். இதைப் பார்த்த பலவேச நாடாரும், பஞ்சாட்சர ஆசாரியும். இவ்வளவு பேசுகிற இதே காத்தமுத்துவும், "ஏண்டா பறப்பய மவனே. என்னதான் நினைச்சிக்கிட்ட? பெரிய குதிர ஏறலாமுன்னு நினைக்கியா? முக்காலும் காக்கா முழுவிக் குளிச்சாலும் அது கொக்காயிடுமா?' என்று கேட்டு, கொட்டும் மழை பெய்தபோது, அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதை நினைத்துப் பார்த்துக் கொண்டான். "குத்திப் பார்த்தா ஒரு ரத்தம், கூடியழுதா ஒரே சத்தமுன்னு ஒரேயடியா அழுவுறாங்கள. ரத்தங் கெட்ட பயலுவ!"

ஆசாரியை இன்னொரு ஆசாரி விரட்டினார்.

"ஒமக்கென்ன தாத்தா வம்பு? யாரும் எப்படியும் போறாக. பேசாம வீட்ல போயி வேலயப்பாரும்."

ஆசாரி, சில . பெண்கள் காதில் தொங்கும் 'பாம்படம்' மாதிரி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனபோது, காத்தமுத்து, நாராயணசாமியை எப்படி அனுப்புவது என்று விழி பிதுங்குமளவிற்கு யோசித்துக் கொண்டிருந்தான். ஆசாரி, நேராக வீட்டுக்குப் போகவில்லை . பலவேச நாடார் வீட்டு வழியாக, மாரிமுத்து நாடாரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். அவருக்குத் தலைவெடித்து விடும் போல் இருந்தது.

நாராயணசாமி, கூட்டம் எதிர்க்காததைவிட 'அமைதியாக' இருந்ததை, அங்கீகாரமாக நினைத்துக் கொண்டு, என்னவெல்லாமோ பேசிக்கொண்டு போனார். அவர் அப்படிச் சத்தம் போட்டுப் பேசியதை. வெளியே பலவேச நாடார் கேட்டுக் கொண்டிருந்தார். ஆசாரியைப் பார்த்துவிட்டுத்தான் அவர் வந்தார். "மாரிமுத்து செய்ததும் அக்ரமம்" என்று அவர் சொன்னபோது, பலவேச நாடார் உள்ளே பாய்ந்து வந்தார். எடுத்த எடுப்பிலேயே, நாராயணசாமியின் அருகே போனார். இருவருக்கும் பழைய தகராறு வேறு.

"என்னல ஒரேயடியாய் அளக்குற? என்ன அக்கரமத்தல ககண்டுட்ட? மாரிமுத்துன்னு பேரு சொல்லிக்கூப்புடுற அளவுக்கு நெஞ்சில