பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊர்ச்சபை முன்னால்...

107



தன்னை அடிக்க வந்தார் என்றும், ஜனாதிபதி, பிரதம மந்திரி, உள்துறை மந்திரி, கவர்னர், முதல் மந்திரி, கலெக்டர், ஐ.ஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., சர்க்கிள் ஆக ஐ.நா. சபை தவிர. அத்தனை பேருக்கும் கையெழுத்துப் போட்டு. மாரிமுத்து நாடார் மனு அனுப்பியிருந்தார். இது போதாதென்று, பலவேச நாடார், சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களைக் கொண்டு, காசு கொடுத்து மொட்டை மனுக்களைத் தட்டிவிட வைத்தார். விஷயம் பழமானதும், 'என்னாலதான் ஆச்சி, என்னாலதான் ஆச்சி' என்று எப்பப்பாத்தாலும்' அவர் பேசியதை மாரிமுத்து நாடார் அவ்வளவாக ரசிக்கவில்லை.

எப்படியோ, மாரிமுத்து பலவேசக்கூட்டு, சப்-இன்ஸ்பெக்டரை ஒழித்துக் கட்டிவிட்டது என்று ஊரே பேசியது. அதோடு 'சப்-இன்ஸ்பெக்டர சஸ்பென்ட் பண்ணியாச்சி' என்று பலவேசம் இன்னொரு புரளியைப் புழங்கவிட்டார்.

ஊரே பயந்துவிட்டது. மாரிமுத்து நாடாரை 'ஹீரோ' மாதிரியும். 'நறுக்குமீசைப் பலவேசத்தை 'ஹீரோயின்' மாதிரியும் பார்த்துக்கொண்டார்கள். இப்போது யாருமே மதில்போல் இருக்கவில்லை . மாரிமுத்துப் பக்கமே இருந்தார்கள். அவரிடம், வலிய வலியப் பேசினார்கள். டீக்கடையில் 'புரட்சி' செய்த கருவாட்டு வியாபாரி நாராயணசாமிகூட நிலைமையைக் கண்டு பயந்து, மாரிமுத்து நாடாரிடம் "மச்சான் ஒம்மப்பத்தி நான் ஒண்ணும் பேசல. பலவேச அண்ணாச்சிதான் பழைய தகராற மனசில வச்சி வாயில வந்தபடி பேசிட்டார்" என்று சொல்லி, நேச ஒப்பந்தம் செய்து கொண்டார். ஹெட்கான்ஸ்டபிள் வேறு மாரிமுத்து நாடார் வீட்டில், அடிக்கடி தன் 'ஹெட்டை' காட்டிக் கொண்டிருந்தார்.

காத்தமுத்துவின் கடையில் "ஊர்க்கூட்டம் போடணும்" என்று உரக்கப் பேசிய சமரச லேரின் யோசனையில், ஊர்க்கூட்டமும் கூடியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்வரை. ஊர்க்கூட்டம் நடைபெற்றுதான் வந்தது. பலவேச நாடார், ஒரு பனையேறியை அடித்து விட்டதற்காகக் கூடிய சபை, மாரிமுத்து நாடாரின் தூண்டுதல் பேரில், பலவேசத்துக்கு 'நாலு தேங்காய்' அபராதம் போட்டது. ஆனால் பலவேச நாடாரோ, "அபராதம் கட்ட முடியாது, செய்யுறத செய்யுங்க" என்று சொல்லிவிட்டு வாக்கவுட்' செய்தார். அவரை ஒன்றும் செய்ய முடியாத ஊர்ச்சபை, அவரிடம் இருந்து தேங்காய்களை வாங்கிப் பிள்ளையார் கோவிலில் உடைக்க முடியாத அந்தச் சபை, தன்னைத்தானே உடைத்துக் கொண்டது சர்வதேச சங்கம் மாதிரி, அது