பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ஒரு கோட்டுக்கு வெளியே ...



என்று குரலே கொடுத்தார். உலகம்மையும் "முப்பது வருஷமா இருக்கிற பூமி. சட்டப்படி நமக்குச் சொந்தமுன்னாலும் காலி பண்ணிடுறோம். ஆனால் பதினைஞ்சி நாளுல முடியாது. ஒரு வருஷத் தவண வேணுமுன்னு சொல்லுவய்யா" என்று அய்யாவுக்குச் சொல்வது போல், பலவேச நாடாருக்குச் சொன்னாள்.

பலவேச நாடார், அப்போதே கூரையைப் பிய்த்து எறிந்து விடலாமா என்று நினைத்தார். பிறகு எதுக்கும் "அத்தாங்கிட்ட (மாரிமுத்து) கேட்டுக்குவோம்" என்று நினைத்து, "தேவடியாச் செறுக்கியவளுக்கு திமிரப்பாரு. எங்கப்பன் சொத்து. அவருக்கா இவா பொறந்திருக்கா?" என்று வழி முழவதும் சொல்லிக்கொண்டே போனார்.

சில நாட்கள் சென்றன. இப்போதுதான் உச்சக்கட்டம் வந்தது.

உலகம்மையின் வீடு, ஊருக்கு வடகோடியில் இருந்தது. கூம்பு மாதிரி இருந்த அந்தக் குடிசையின் நான்கு பக்கமும் நிலம் வெறுமனே கிடந்தது. வீட்டில் இருந்து. எந்தப்பக்கம் வேண்டுமானாலும் போகலாம்.

அந்த வீட்டுக்குக் கிழக்கே இருந்த நிலம் பலவேச நாடாருடையது. அந்த நிலத்தின் 'பொழியை' பலவேசம் பனை ஓலைகளால் செருவை' வைத்து அடைத்தார். மேற்குப் பக்கத்து நிலம், படி ஏஜெண்ட் ராமசாமியுடையது. அவன், அதில் வேலிக்கரையான் செடிகளை வைத்தான். உலகம்மை அதையும் மீறி நடக்கக்கூடாது என்பதற்காக, 'கறுக்கு மட்டைகளை' வைத்ததோடு, கருவேல மர முட்களையும் கொண்டு வந்து போட்டான். தெற்குப் பக்கத்து நிலம், பிராந்தனுடையது. அவன் சார்பில் மாரிமுத்து நாடார், மூன்றடி நீளச் சுவரைக் கட்டி, அதற்குமேல் சில முட்கம்பியை வைத்து, அதன் இரண்டு பக்கத்தையும் சுவரையொட்டி இருபக்கமும் நட்ட கம்புகளில் கட்டிவிட்டார். ஆக உலகம்மை மூன்று பக்கமும் போக முடியாது. ஊரில் என்ன நடக்கிறது என்று பார்க்கவும் முடியாது. 'ஏன் இப்படி' என்று கேட்கவும் முடியாது. அவர்கள் பூமி. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

வடக்குப் பக்கத்தில் நிலம் கிடையாது, மேற்குப் பக்கத்து நிலமும் கிழக்குப் பக்கத்து நிலமும் ஒன்றாகச் சேர்ந்த முக்கோணத்தின் முனைமாதிரி இருந்த ஒற்றடிப்பாதை அது. மூன்றடி அகலம் இருக்கும். ஐம்பதடி தாண்டியதும், ஒருவருடைய தோட்டம் வரும். தோட்டத்திற்கு அதன் சொந்தக்காரர், கிழக்கே இருந்தோ, தென்மேற்கிலிருந்தோ வருவார். ஆனால் உலகம்மை இப்போது அந்த வழியாகத்தான் நடந்தாக