பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒறுக்கப் பட்டு....

131



"ஏன்னு தெரியுமால? இதுதான் வசதியா இருக்கும். ஜாக்கெட்டுன்னா இழுக்கணும் மூடணும். இதுன்னா ரொம்ப வசதி. நிறயப் பேரச் சமாளிக்கலாம்."

உலகம்மையின் முன்னால், அவள் தூக்கும் அளவிற்குள்ள பாறாங்கல் ஒன்று கிடந்தது. அதைத்தூக்கி. பொந்தன் மேல் எறிகிற தைரியம் இருந்தது. வீம்பு இருந்தது. சிறிது யோசித்து கீழே குனிந்தாள். "பொந்துப்பயல இன்னைக்கே தீர்த்துடலாம்" குனிந்தவள், அதன் விளைவுகளை நினைத்தவள்போல அவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டு எழுந்து, சிறிது நேரம் நின்றாள். அலிகள்மாதிரி அந்த இருவரும் வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். இதைப் பார்த்ததும், உலகம்மாவுக்குச் சிறிது சிரிப்புக்கூட வந்தது.

வீட்டிற்கு வந்ததும், என்னென்ன பொருட்களெல்லாம் இல்லை என்று பார்த்தாள். ஒவ்வொரு பொருளையும் அவள் வெளியூரிலிருந்து வாங்கியாக வேண்டும். அதோடு, முன் எச்சரிக்கையாக 'ஸ்டாகி' வேறு வைத்திருக்க வேண்டும். பானை உடையலாம். இன்னொரு பானை இருக்க வேண்டும். தீப்பெட்டி மழையில் நனைந்து போகலாம். இன்னொன்றும் தயாராக இருக்க வேண்டும். முன்மாதிரி, 'சுள்ளி' பொறுக்க முடியாது. சோளத்தட்டையாவது இருக்க வேண்டும்.

உலகில், எந்த நாடுமே தன்னிறைவு பெறாத நிலையில், தொழில்துறையில் மேலோங்கி வரும் ஆனானப்பட்ட ஜப்பானே, கச்சாப் பொருட்களில் குறிப்பாக பெட்ரோலியத்தில், தன்னிறைவு இருக்கட்டும், ஓரளவுகூட இல்லாமல் இருக்கும் இந்தக் காலத்தில், அமெரிக்கா, ரஷ்யா முதலிய வல்லரசுகள்கூட எல்லா விஷயத்திலும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத தற்காலத்தில் பாரதம் முதலிய மேம்பாடு அடைந்துவரும் நாடுகள், தன்னிறைவு என்பதை 'எல்லாவற்றிலும் அல்ல பெரும்பாலானவற்றில்' என்று பிரத்யட்ச வியாக்கியானம் செய்துவரும் இந்தச் சமயத்தில் மேம்பாடடைய முடியாத அந்த ஒற்றைப் பெண், எல்லா விஷயத்திலும் தன்னிறைவு பெற வேண்டிய புதிய பொருளாதாரச் சிறையில் வைக்கப்பட்டாள். அதோடு, வீட்டுச் சாமான்கள், 'சர்பிளஸாகவும்' இருக்கவேண்டிய அவசியம். 'எகனாமிக் பிளாக்கேட்' வேறு.

நாட்டுக்கே முடியாத ஒன்றை, வீட்டுக்குச் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டாலும், உலகம்மையால், அத்தனை கஷ்டங்களையும் தாங்கவும் முடிந்தது, தாக்குப்பிடிக்கவும் முடிந்தது. ஆனால் தனிமைப்படுத்தப் பட்டதைத்தான் அவளால் தாங்க முடியவில்லை. கொடிய இருக்கட்டும் பாருட்களில் குறிப்பு வரும் ஆன