பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஒரு சத்தியத்தின் அழுகை

சேகர் இரண்டு நாட்களில் டிஸ்மிஸ் செய்யப்பட்டான். அந்த நிறுவனம், ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதன் பங்குதாரர்கள் அனைவருக்கும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிபற்றி விரிவாகக் கடிதங்கள் எழுதினான். முத்துசாமி வழக்கப்படி "தர்மம் ஜெயிக்கும்." என்று ஆறுதல் கூறினார்.

ஒரு மாதம் ஒடியிருக்கும். ரிட்டயரான முத்துசாமி அவனைத் தேடிவந்தார். சேகர், உனக்கு விஷயம் தெரியுமா? நீ எழுதின லெட்டர்களை வச்சே ஜெனரல் - பாடியைக் கூட்டியிருக்காங்க... இனிமேல் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருக்கிறதுக்கு பல சட்டதிட்டங்களை வகுத்திருக்காங்க... மானேஜரையும், மானேஜிங் டைரக்டரையும் துக்கிட்டாங்க."

சேகர் துள்ளினான். "எனக்குப் பழையபடி வேலை கிடைக்குமுன்னு சொல்லுங்க." "அது வந்து. உன்னை வேலையில் வைக்கனுமுன்னு. சிலர் சொல்லியிருக்காங்க. அப்படி உன்னை வச்சா... எல்லாரும் பெட்டிஷன் எழுத ஆரம்பிச்சு டுவாங்கன் னு மெ ஜாரிட்டி சொல்லிட்டதாம். அதாவது... நீ எழுப்பின பிரச்சினைகளை தீர்த்திருக்காங்க. ஆனால் உன் பிரச்சினையைத் தீர்க்கலை."

தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைப்பதையும் பொருட்படுத்தாமல், "அது போகட்டும், நம்ம ஆபீஸ் இப்போ எப்படி இருக்கு? என்று சொல்லிப் பேச்சை மாற்றினான் சேகர்.

"இப்போ வந்திருக்கிற புதிய மானேஜர் நேர்மையானவராம். பழைய தில்லுமுல்லு எதுவும் கிடையாதாம். ஆபீஸ் நியாயஸ்தலமாக நடக்குதாம். கடைசியில நான் சொன்னது மாதிரி தர்மம்..."

"ஜெயிச்சிட்டுது" என்று சொல்லப்போன வார்த்தையை வாய்க்குள்ளேயே ஜீரணித்து, அதன் அஜீரணத்தினால் திக்கித் திணறினார் முத்துசாமி.

"சும்மா சொல்லுங்க சார். கடைசியில் தர்மம் ஜெயிச்சிட்டுது... ஆனால் தர்மவான்தான் தோற்றுட்டான். சரிதானே?"

முத்துசாமி கண்களைத் துடைத்துக் கொண்டார்.