பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஒரு சத்தியத்தின் அழுகை

"இதுல யோசிக்கறதுக்கு என்ன மாமா இருக்கு? அன்னக்கிளியை, மெட்ராஸிலே ஒரு ஆபீஸர் பையனுக்கு குடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். இந்தச் சமயத்துலே பெருமாள் பய இப்படிப் பண்ணுணால்... நாலு பேரு என்ன நினைப்பான்? எவ்வளவு அசிங்கமா இருக்கு?"

"என்னடா அசிங்கம்? தாய் மாமா மகள்னு சும்மா சின்னப் பயபிள்ள சின்னத்தனமா விளையாடியிருப்பான். இதைப் போயி பெரிசாக்குறியே..."

"என்ன மாமா அப்படிச் சொல்லிட்டிரு. தாய் மாமா மவனா இருந்தா என்ன? அவங்களுக்கும் எங்களுக்கும் இழவும் கிடையாது. எட்டுங் கிடையாதுன்னு ஆனப்போ விளையாட்டு எதுக்கு? அதுல்லாம் இல்ல. நாங்க என்ன பண்ண முடியும் என்கிற இளக்காரம் - கொழுப்பு..."

"டேய்... ஆத்திரப்படாதே. பொறுத்தவரு பூமியாள்வார்!" "சும்மா கிடங்க மாமா... நான் இன்னும் ரெண்டு நாளையில ஊருக்குப் போயி, போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறேன்." “ டேய்... அப்படிப் பண்ணக் கூடாது.டா... போலீஸ்ல நீ கம்ப்ளெயிண்ட் குடுத்தால், அவங்க வேணுமின்னு வம்புக்காவது "அன்னக்கிளிக்கும், பெருமாளுக்கும் காதலு. அதுல அவன் பாடியிருக்கான்னு சாதிப்பாங்க. கோர்ட்ல. அவங்க வக்கீலு உன் தங்கச்சிய கூண்டுல நிக்க வச்சி. நீ பெருமாளை எத்தனை தடவ எங்கெல்லாம் சந்திச்சன்னு அசிங்கமா கேட்டாங்க. இது வயசுப் பொண்ணு விவகாரம். அம்பலத்துக்குப் போகக் கூடாது..."

"அதுவுஞ் சரிதான். பர்மா பஜாருல போயி ஒரு கத்தி வாங்கப் போறேன். ஊருக்குப் போயி, விசிலடிச்ச பெருமாளோட வாயைக் கிழிப்பேன். முழங்கால் சிப்பியை எடுப்பேன். அவன் அகப்படலன்னா... அவன் தங்கச்சி கையைப் பிடிச்சி இழுப்பேன். அப்புறம் விசிலடிப்பேன்."

டேய்... ஏடாகோடமாய் பேசாதடா... அவங்களே அவள் கையை, உன் கைல பப்ளிக்கா வைக்கிறேன்னு சொன்னபோது மறுத்துட்டு. இப்போ பலவந்தமா கையை இழுக்கறது வீரமாடா?"

ஐயாசாமி எதைச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மாடக்கண்ணு சிறிது சங்கடப்பட்டான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன்போல், "நீரு ஆயிரம் சொன்னாலும் சரிதான்; அதுக்கு மேலே சொன்னாலும் சரிதான். நாளக்கழிச்சி ரயில் ஏறப் போறேன். அவங்களப் பழிவாங்கப் போறேன்."