பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்



எல்லோரும் இரட்டையராக ஆடுகளத்தினுள் நின்று விரட்டித் தொட தனியாள் (it) ஒருவரை நியமித்து விட வேண்டும். அவர் மாற்றுங்கள் (Change) என்று சத்தமிட்டவுடன், சேர்ந்து ஒடும் இரட்டையர்கள் உடனே தங்கள் பாங்கரைப் (Mate) பிரிந்து இன்னொரு ஆட்டக் காரருடன் போய் முதுகோடு முதுகாக ஒட்டிக் கைகளைக் கோர்த்துக் கொண்டு நின்றுவிட வேண்டும்.

ஜோடி கிடைக்காமல் அலைகின்றவரை விரட்டுபவர் தொட்டுவிட்டால், தொடப்பட்டவர் விரட்டுபவராக மாற ஆட்டம் தொடரும்.

69. அங்கே நில் (Spud)

ஆட்ட அமைப்பு: ஆடுகளத்தின் மத்தியிலே 5 அடி

விட்டமுள்ள வட்டம் ஒன்று போட்டிருக்க வேண்டும்

ஆசிரியரின் கையிலே பந்து ஒன்று இருக்க வேண்டும்.