பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

107


ஆட்டக்காரர், தலைவனை மாற்றுகிறோம் (Captain change) என்று கத்திவிட்டு குழுத் தலைவன் இருக்குமிடத்திற்குப் போய் நின்று கொள்ள வேண்டும்.

குழுத் தலைவன் தன் குழுவின் கடைசியில்போய் நின்று கொள்ள, முன்போல் ஆட்டம் தொடர்கிறது. இவ்வாறு குழுத்தலைவன் மீண்டும் சதுரத்தின் மையத்திற்கு வரும்வரை ஆட்டம் தொடரும். முதலில் நின்ற குழுத் தலைவனே மீண்டும் தான் நின்ற பழைய மைய இடத்திற்கு வருவதுபோல எந்தக்குழு முதலில் ஆடி முடிக்கிறதோ, அந்த குழுவே வென்றதாகும்.

73. காவல் வீரர்கள்

(Guarding the clubs)

ஆட்ட அமைப்பு: மைதானத்தின் நடுவில் 3 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றைப் போட்டு, அதன் நடுவில் மூன்று கரளா கட்டைகளை (Indian clubs) நிறுத்தி வைக்க வேண்டும். அந்த வட்டத்திற்குள்ளே இரண்டு ஆட்டக்காரர்களை காவல் வீரர்களாக நிறுத்தி வைக்க வேண்டும்.

அந்தச் சிறு வட்டத்தைச்சுற்றி 5 கெஜம் விட்டமுள்ள பெரிய வட்டம் ஒன்றையும் போட்டு, அதற்கு வெளியே எல்லோரையும் நின்று ஆடச் சொல்ல வேண்டும்.

ஆடும் முறை: வட்டத்தில் நிற்க வைத்திருக்கும் கரளா கட்டையை வெளியே நிற்கும் ஆட்டக்காரர்கள் பந்தினால் அடித்துச் சாய்க்க முயல வேண்டும். அவர்கள் முயற்சியில் வெற்றி பெறாமல் காவல் வீரர்கள் தடுத்தாட வேண்டும். ஒரு பந்துக்குப் பதிலாக இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டும் ஆடலாம். காவலையும் மீறி கரளா