பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

117


ஒவ்வொரு குழுவினரையும் முதலில் வரிசையாக நிற்க வைக்க வேண்டும்.

அருகருகே நிற்க வைக்காமல், ஒரு ஆட்டக்காரருக்கும் மற்ற ஆட்டக்காரருக்கும் இடையே 90 அடி தூரம் இருப்பதுபோல் நிற்க வைக்க வேண்டும். ஒரு குழுவில் 10ஆட்டக்காரர்கள் இருந்தால், முதல் ஆட்டக்காரருக்கும் கடைசி ஆட்டக்காரருக்கும் 100 அடி தூரம் இருப்பது போல் அது அமைந்திருக்க வேண்டும்.

முதலில் நிற்கும் ஆட்டக்காரர்களிடம் ஒரு பந்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை; ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, ஆட்டம் தொடங்கும். பந்தை வைத்திருக்கும் ஆட்டக் காரர் தன் பின்னால் நிற்கும் இரண்டாவது ஆட்டக் காரருக்குப் பந்தைத் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு கடைசி ஆட்டக்காரரிடம் பந்து போய், அங்கிருந்து முன்போலவே பந்தை எறிந்து மாற்றி மாற்றி முதலாம் ஆட்டக்காரருக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும்.

எந்தக் குழு முதலில் இவ்வாறு பந்தெறிந்து ஆடுகிறதோ, அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: நன்றாகப் பின்புறம் திரும்பி, தன் இடத்தை விட்டு அசையாமல் பந்தை அடுத்தவருக்கு எறியலாம். அல்லது, ஒரு பக்கமாகத் திரும்பி (Turn) எறிவது போலவும் விதி அமைத்துக் கொள்ளலாம்.

பந்தை ஒடிப்போய் பிடிக்கக் கூடாது. ஆனால் தன் பாங்கருக்கு சரியாகப் பந்து போய் கிடைப்பதுபோல் தான் எறிந்தாட வேண்டும்.

தவறவிட்டுவிட்டால், அதற்குப் பொறுப்பானவர் தான் ஒடிப்போய் பந்தை எடுத்து வந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும். வேறு யாரும் பந்தை

- - - - - /-"r/LY rr rrr ar r rr rrr rr rrrrr ΟΥ Μ. Α-Υ ΓΛΥΓΥ- ΓrΛΥ Γ.Γ. Τη Γ.Γ ΛΟΥ. Γ Πr rr- Ι T-r IT