பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 133

ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு ஆட்டக்காரரையும் நிற்கச் செய்ய வேண்டும்.

வட்டம் இல்லாத ஒருவரை விரட்டித் தொடுபவராக it) நியமித்து, வட்டத்தின் மையத்தில் நிற்குமாறு செய்ய வேண்டும்.

ஆடும் முறை: வட்டத்தின் மையத்தில் நிற்பவர் எல்லோரும் மாறுங்கள் என்று சத்தமாகக் கூற வேண்டும். உடனே சிறு சிறு வட்டத்தில் நிற்பவர்கள், தங்கள் வட்டத்தை விட்டு மாறி, வேறொரு வட்டத்திற்குள் ஒடிப்போய் நின்றுகொள்ள வேண்டும்.

அவர்கள் வட்டம் தொடும்பொழுது, சத்தம் போட்ட வரும் ஒடிப்போய் ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். யாருக்கு வட்டம் கிடைக்கவில்லையோ, அவர்சத்தம் போடுபவராக வட்டத்தின் மையத்தில் போய் நின்று முன்போல் ஆணையிட, ஆட்டம் தொடரும்.