பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

13


கொள்ளவும் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து வைத்துக் கொள்வது சாலச்சிறந்த முறையாகும்.

அதற்காக, ஆட்டத்திற்கு முன்னும் பின்னும், ஆட்ட நேரத்திலும் பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பான முறைகளைக் கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம்.

1. மாணவர்கள் விருப்பம் போல் விளையாடக்கூடிய சிறு விளையாட்டுக்களைத்தான் நாம் நடத்துகிறோம் என்பதால், ஒருவர் மீது ஒருவர் தாவுதல், ஏறுதல், தள்ளுதல், பிடித்தல் போன்றவற்றில் ஈடுபட வாய்ப்பிருப்பதால், ஒரே வயதினராகவும், ஒரே தன்மையுள்ள உடலமைப்பும் உயரமும் (Same Age and Physique) உடையவராகவும் மாணவர்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு ஆடவிடுவதில் அதிக கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும்.

2. ஆடுகின்ற தரை அதிக வழுக்கல் நிறைந்ததாக இல்லாததாகப் பார்த்து விளையாட விட வேண்டும்.

3. அதிகமான மேடு பள்ளம் உள்ள இடங்களிலும் கல் முள் இருக்கும் இடங்களிலும் ஆட விடாமல் சம தரையுள்ள பகுதிகளில் ஆடுமாறு செய்ய வேண்டும்.

4. விளையாடப் போகின்ற ஆட்டத்தினைப் பற்றி சுருக்கமாக தொடக்கத்தில் விளக்கிக் கூறி, அதனுடைய நோக்கம், ஆடும் முறையைப் பற்றியும் தெளிவாகக் கூறி, முதலில் எவ்வாறு ஆடுவது என்பது பற்றியும் அவர்களுக்குப் புரியும்படி செய்துவிட்டால், ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆட முடியும்.

5. முரட்டுத்தனமாக விளையாட யாரையும் எப்பொழுதும் அனுமதிக்கவே கூடாது.