பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைவனையும் நியமித்து விட வேண்டும்.

ஆசிரியர் 2 துண்டுக் கடிதங்களை எடுத்து வைத்துக்

கொண்டு, அதில் சிறு குறிப்பினை எழுதி, குழுத் தலைவர்களிடம் கொடுத்திட ஆட்டம் தொடங்கிவிடும்.

ஆடும் முறை: ஆசிரியர், ஒரு தாளில், ஒரு காரியத்தைச் செய் என்று எழுதியும் இன்னொரு தாளில் அதைச் செய்ய விடாமல் தடுத்து நிறுத்து என்பதாக எழுதி வைத்து அவற்றை சுருட்டி வைத்திருக்க வேண்டும்.

உதாரணமாக எதிரே உள்ள மாமரத்தைத் தொட்டு விட்டு வாருங்கள் என்றும், இன்னொரு தாளில் அவர்களை மாமரத்தைத் தொடாமல் தடுத்து நில்லுங்கள் என்றும் எழுதிவிடலாம்.

குழுத் தலைவர்களிடம் இந்தத் தாளினைத் தந்ததும் அவர்கள் தங்களுக்கிட்ட ஆணையைத் துணிந்து செய்ய புறப்பட்டுவிடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்தப் போராட்டத்தை முடித்துக் கொள்ளச் செய்து விட வேண்டும்.

குறிப்பு:'' மரம் இல்லை என்றால் என்ன செய்வது என்று யோசிக்காமல் சுவர், அல்லது கம்பத்தைத் தொட்டுவிட்டு வா அல்லது பந்து ஒன்றைப் போட்டு விட்டு எடுத்துக் கொண்டு வா என்று ஏதாவது ஒரு பொருளைச் சுட்டிக்காட்டி எழுதி வைக்கலாம்.

ஒரு குழு எதிர்க்குழு செய்கின்ற காரியத்தைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது முரட்டுத்தனமான காரியங்களில் ஈடுபட ஆசிரியர் அனுமதிக்கக் கூடாது.