பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, எந்த வட்டத்தில் அதிக ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களோ, அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

குறிப்பு: ஒரு வட்டம் என்பது கோட்டை போல் கருதப்பட வேண்டும். அதிலுள்ள ஆட்களை கடத்திக் கொண்டு வருவது என்பது தான் கோட்டையைப் பிடிப்பதாகும். அதுவே ஆட்டத்தின் நோக்கமும் ஆகும். முரட்டுத்தனமாகவோ, மூர்க்கத்தனமாகவோ விளை யாட்டில் ஈடுபடக்கூடாது.

29. பந்தைப் பிடி

(Catcher Ball)

ஆட்ட அமைப்பு: 40 மாணவர்களைக் கொண்டு இந்த ஆட்டத்தை ஆடலாம். -

மாணவர்களை இரண்டு சம எண்ணிக்கையுள்ள குழுவினராகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

குழு 1, குழு 2 என்று பெயர் கொடுத்துவிட்டு, 20அடி இடைவெளியில் இரண்டு நேர்கோடுகளைப் போட்டு இந்த நேர்க்கோடுகளில் இடைவெளி விட்டு விட்டு 10 வட்டங்கள் போட வேண்டும். வட்டத்தின் விட்டம் 3 அடி இருப்பதுபோல வட்டம் போடவும்.

குழு 1-ல் உள்ள10ஆட்டக்காரர்கள் 10வட்டத்திலும், குழு 2-ல் உள்ள 10 ஆட்டக்காரர்கள் எதிரே உள்ள 10 வட்டத்திலும் போய் நின்று கொள்ள வேண்டும். இவர்கள் பந்தைப் பிடிக்கும் (Catcher) ஆட்டக்காரர்களாகும்

பிறகு, குழு 1-ல் இருக்கும் பிடிப்பவர்களுக்கு அருகாமையில் குழு 2-ன் மீது 10ஆட்டக்காரர்கள் போய்163