பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னென்ன விளையாட்டுக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை கடைசிப் பக்கங்களில் அகரவரிசையில் தொகுத்துத் தந்திருக்கிறோம். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல், பொழுது போக்கிற்காக சேர்ந்து விளையாடி மகிழ விரும்புபவர்களுக்கும் இந்நூல் உற்ற துணையாக இருந்து உதவும் என்று நம்பி, உங்கள் முன் படைக்கிறோம். - விளையாட்டுத்துறை இலக்கியத்தில், மேலும் ஒரு புதிய வெளியீடாக இந்நூல் வெளிவருகிறது. என் முயற்சியைத் தொடர்ந்து ஆதரித்து வரும் தமிழ்கூறும் நல்லுலகம், இந்நூலையும் ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் என் பணியைத் தொடர்கிறேன். = இந்நூல் நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்தது. அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்போது மூன்றாம் பதிப்பினை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். பதிப்பகத் தாருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம், - அன்பன், டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா. அமரர் டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள் 2000 ஆண்டில் மூன்றாம் பதிப்பின்போது எழுதிய முன்னுரையை அப்படியே வெளியிட்டுள்ளோம். - பதிப்பாளர்.