உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதர். சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்தார் அந்த "என்ன வேணும்?" என்று கொஞ்சம் அருவருப் போடும், பயத்தோடும் கேட்டான் ராதா. 'அடியேனுக்கு போட்டோ காகக் கூறினார் அவர். வேணும்" மிடுக் போட்டோ? வடக்கே ஜீனத் அமன், ஹேம மாலினி, ரேகா, தெற்கே ஜெயசுதா, ஸ்ரீப்ரியா, ஜெய மாலினி, ஷோபா, ரதி, ராதிகா... 'நிறுத்து! அந்த ரசனைக் கெல்லாம் அப்பாற்பட் டவன் நான்...!" இல்லியா? களே?" ? .. அப்படியா... அப்போ நீங்க மிழ்நாடு 'ஏன்? "சினிமா மோகமே இல்லாதவரா இருக்கீங் 'கட கட'வென்று சிரித்தார் அந்த மனிதர். அப்பனே, அடியேனை ஒரு போட்டோ எடு. இந்தா... பிடி!-பத்து ரூபாய் நோட்டை நீட்டினார் அவர். பரவசமடைந்த ராதா, பணத்தை வாங்கிக் கொண்டு அந்த மனிதரை இரண்டு மூன்று 'போஸ்'களில் படம் பிடித்தான். "சுவாமி, துபாய்க்குப் போகுதா? பாஸ்போர்ட் கேஸா?" பவ்யமாகக் கேட்டான் ராதா! "இது சொர்க்கத்துக்குப் போகிற கட்டை அப்பனே, துபாய்க்கும் போகாது, பம்பாய்க்கும் போகாது"! "எலக்ஷன்லே நிக்கிறீங்களா? ?வால்போஸ்டர் விவகாரமா? "எலெக்ஷனுமில்லே, இனிமே நீ கேள்வி கேட்கிறதுக்கு எக்ஸ்டென்ஷனும் இல்லே......! "சுவாமி கோவிச்சுக்கக் கூடாது! பார்த்தா ரொம்பப் படிச்சவர் போல தெரியுது அடியேனுக்கு கொஞ்சம் விவரமா சொன்னா தேவலே!" பணிவாகக் கூறிய ராதா, அந்த மனிதரின் எதிரில் கைகட்டிப் பணிந்து நின்றான். . தொண்டையை ஒருமுறை ஒருமுறை கனைத்துக்கொண்டு அவர் சொன்னார்: "யாம் சாமியாருக்கு, சாமியார்! மந்திர வாதிக்கு மந்திரவாதி! மகாலிங்க மலையில் ஏழாண்டுக் காலம் அலைந்து திரிந்து ஆண்டவனின் அனுக்கிரகம் பெற்றுவந்துள்ளோம். பேய், பிசாசு, சைத்தான் ஆட்டத்தை நிறுத்துவோம். பில்லி சூன்யத்தை அகற்றுவோம். தீராத நோயைத் தீர்ப்போம். சாகப்போகிறவனைப் பிழைக்க வைப்போம்!* -அந்த மந்திரவாதி கூறியதைக் கேட்கக்கேட்க ராதர்வுக்கு நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. சமாளித்துக் கொண்டு சொன்னான்: 11