உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சுவாமி... மாடியிலே ஒரு பையன், கடுமையான காய்ச்சல்லே கெடக்கிறான்...ஏதோ கனவு கண்டு பயந்து போய் தூக்கத்தில் புலம்பிட்டு பீதியா இருக்கிறான். அவனைக் குணமாக்க மு டியுமா?" ராதா இப்படிக் கேட்டானேயொழிய, இந்த மந்திரவாதியின் உருவத்தைப் பார்த்து பாபு பயந்து போய் அவனுக்கு காய்ச்சல் அதிகமாகிவிடுமோ என்றும் பயந்தான். "எம்மிடம் முடியாததே இல்லை அப்பனே! சொல்வது பில்லி சூன்ய வேலைதான். ஒரு நாள் இரவு முழுள தும் ஜெபம் செய்தால் விடிவதற்குள் சரியாகிவிடும் ஒருநாள் இதைக் கேட்ட ராதாவுக்கு மகிழ்ச்சி பொங்கி யது. "தயவு தயவு செஞ்சி வாங்கோ" என்றபடி முன்னே நடக்க அவனைப் பின்தொடர்ந்தார் மந்திரவாதி! அப்போதுதான் விழித்தெழுந்த பாபு ஓடிச் சென்று ஜன்னலைத் திறந்து பன்னீர் மரக்கிளையைச் சிறிது நேரம் பார்த்தான். பிறகு, திரும்பவும் வந்து கட்டிலில் உட் கார்ந்து கொண்டு, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. ஐந்து, ஆறு' என்று வாய்விட்டு எண்ணினான். அப்போது அங்கு வந்த தேவகி, "என்ன எண்ணு கிறாய் பாபு?" என்றாள் கொஞ்சும் குரலில் 1 எனது நாட்களையம்மா! .. பதில் சொன்னான் பாபு. SPME பளிச்சென்று அதெல்லாம் ஒண்ணுமில்லேடா பாபு... நீ நூறு வருஷம் இருப்பே பாரேன்!” அவனுக்கு ஆறுதலாக தேவகி கூறினாலும், அவளது கண்கள் நீரைக் கொட்டின. அவளது முகத்தை ஏறிட்டுப் பார்த்த பாபு, ஏனோ "நீ ஏம்மா அழறே? நான்தான் இன்னும் ஆறு நாள் இருக்கப் போறேனே?" - என்றான்; அவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டு கேவிக்கேவி அழுதாள் தேவகி. அந்தச் சமயம் அங்கு வந்த ராதாவையும், மந்திரவாதியையும் பார்த்த தேவகி திடுக்கிட்டாள்! யாபுவும்தான்! வந்ததும், வராததுமாக ராதா கூறினான். தேவகி இவரு யாரு தெரியுமா? பெரிய மகான், மந்திரவாதி! இவர் பூஜை செய்தார்ன்னா பாபுவோட காய்ச்சல் பறந்து போயிடும்... பெரிய பெரிய டங்களிலெல்லாம் இவர் இப்படி மந்திரிச்சிருக்கார்... இன்னியோட ஒன் கவலை உட்டுது!" 12