உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மரம் பூத்தது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாயந்து தரையில் உட்கார்ந்து விட்டான். அவனால் நடக்கமுடியவில்லை. ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த தேவகி, கீழே ஓடிவருகிறாள். தூக் தன்னை யாரோ தொட்டுத் குவதை உணர்ந்த ரகு திடுக்கிட்டுப் போனான். போலீசுக்குத் தப்பி வந்திருப்பவனாதலால் அவனுள் இருந்த பயம் அப்படி அவனைத் திடுக்கிட வைத்தது. ஆனால் தன் உடம்பில் பதிந்த கையைத் தடவிப் பார்த்தபின்தான் அது ஒரு பெண்ணின் கை என்பதையறிந்தான். தேவகி..!" என்று மெதுவாக அழைத்தபடி அவள் முகத்தைப் பார்த்தான். 'ஆமாம்' என்பதுபோலத் தலையாட்டிய தேவகி, அவனை அப்படியே கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு மாடிக்கு வந்தாள். சாய்ந்தபடி தேவகியும், அவளது தோளில் ரகுவும் செல்வதை அவர்கள் அறியாமல் - கண் கொட்டா மல் பார்த்துக்கொண்டே இருக்கிறான் ராதா. மாடியில் ஒதுக்குப் புறமாக இருந்த படுக்கை அறைக்குள் ரகுவை அழைத்துச் சென்று நாற்காலியில் உட்கார வைத்தாள் தேவகி. கொடியில் கிடந்த ஒரு டவலை எடுத்துக் கொண்டு அவனிடம் ஓடிவந்த அவள், அவனது தலையைத் துடைப்பதற் காக வேகமாகக் கையைக் கொண்டு போனாள். அடுத்த விஞ் டியே ‘சடக்' கென்று கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு, டவலை அவனிடம் தந்தாள். தலையைத் துவட்டத் தொடங்கினான். . அவன், டவலால் அங்கிருந்த பீரோவைத் திறந்த தேவகி ஒருகணம் அப்படியே நின்றாள். அதில் அவளது கணவன் திவாகரின் சில உடைகள் அவன் நினைவாக இருந்தன. அதை எடுத்து ரகு வுக்குக் கொடுப்பதா வேண்டாமா என்று அவள் மனம் ஊச லாடிக் கொண்டிருந்தது. இறுதியில் ஒரு வேட்டியையும், சட்டையையும் எடுத்து வந்து ரகுவிடம் கொடுத்தாள். 'உடையை மாற்றுங்க... இதோ ஒரு நொடி யில காபி கலக்கிறேன்!" என்று சொல்லிச் சமையல் கட்டுக் குள் பறந்தாள். தேவகி கொடுத்த காபியைக் குடித்த ரகு,சிலைபோல் உட்கார்ந்திருந்தான். அவன் மனத்தில் ஏதோ ஒரு பாரம் இறங்கியிருப்பது போல அவன் முகம் காட்டியது. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் தேவகி! இப்போது அவனது கண்களும் அவள். முகத்தை ஏறிட்டு நோக்கின. 'எனக்காகக் கொலைப்பழியை ஏத்துக்கிட்டிருக் கீங்க! என் மகனைக் காப்பாத்தறதுக்காக சிறையிலேயிருந்து தப்பி வந்து, அதுக்கும் ஒரு தண்டனையை ஏற்கப் போறீங்க... உங்களுக்கு நான் எப்படித்தான் கைமாறு செய்யப் போறேனோ?" என்று சொல்லிக் கண் கலங்கினாள் தேவகி. தைக் கேட்டு சற்று பலமாகவே சிரித்தான்ரகு. உங்கிட்டே இருந்து கைமாறு எதிர் பார்த்தா இந்தக் காரியங்களைச் செய்தேன்?" நான் 38