பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


சாமான்களைத் திருடிக் கொண்டு போனது பற்றித்தானே?” என் முன்.

இதைக் கேட்டதும் சேகர் அசந்து போய்விட்டான். 'என்ன பாபு உளரறே? ஹாஸ்டல்லேருந்து நீ திருடி னியா?’ என்ருன் எல்லைமீறிய ஆச்சரியத்துடனும் அதிர்ச் சியுடனும்.

'ஆமாம் சேகர் ஹாஸ்டலில் அவர்கள் நடந்து கொண்ட ஒழுங்கினத்தைப் பற்றி விசாரிக்க முதல்வர் விசா ரணைக்கு எற்பாடு செய்திருக்கிருர் அல்லவா? என்மேலுள்ள அந்தக் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒரு சதியை உருவாக்கி யிருக்கிருன் முர்த்தி. ஐம்பது எவர்சில்வர் தட் டுக்களையும், நூறு ஸ்பூன்களையும் நான் ஹாஸ்டலிலிருந்து திருடியதற்கு முதலில் எனக்கு விசாரணை நடத்திவிட்டு, பிறகு தன் கோஷ்டியினரின் குற்றங்களை விசாரிக்குமாறு முதல்வருக்கு மூர்த்தி எழுதியிருக்கிருன் வேலியே பயிரை மேய்ந்து விட்டது” என்று.

என்ன பாபு இது?, புதுக் குழப்பமாக இருக்கிறது? என்னுல் நம்பவே முடியவில்லையே! இதெல்லாம் முன் ஏற் பாடா? உனக்கு எப்படித் தெரியும்?’ என்ருன் சேகர்.

எப்படியோ தெரியும். என்மேல் இப்படியொரு திருட்டுப் பட்டத்தைச் சுமத்தி எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்திப் பழிக்குப் பழி வாங்க அவன் போட்ட

திட்டமிது.”

'சே! இந்த மூர்த்தி கும்பலாலே நம்ம கலைமகள் கல்லூ ரிக்கே கெட்ட பெயர் வந்து விடும் போலிருக்கே.’’

'காலேஜுக்கு எந்தப் பேர் வந்தா அவங்களுக்கு என்ன சேகர்? தான் கற்ற கல்லூரியில் நற்பெயரைச் சம்பா தித்துக் கொள்ள இயலாத மாணவனல், தான் பிறந்த நாட்

டிற்கும் பெருமை தேடித் தர இயலாது, என்று எங்கள் லெக்சரர் அடிக்கடி சொல்லுவார்.