பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ரமேஷ் வீட்டில் ரகசியக் கூட்டம்

எது அநீதி?-கோபமோ, அச்சமோ, இன்பமோ, துன்பமோ, பொருமைகளோ, ஆசைகளோ நம்மை ஆட்டிவைக்கும்போது நாம் செய்யும் செயல்களுக்குப் பெயர்தான் அநீதி. -பிளேடோ

ரமேஷின் வீட்டு மாடியிலுள்ள விசாலமான ஹாலில்

அவனது கல்லூரி நண்பர்கள் எல்லாம் வந்து கூடி இருந்தார் கள். ரமேஷின் பெற்றேர்கள், ஒரு திருமணத்திற்காக ஊருக்குப் போயிருந்ததால் வீடு காலியாக இருந்தது. பாட்டி மட்டும்தான் துணைக்கு இருந்தாள். அதஞலேயே, அந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தைத் தன் வீட்டு மாடியில் வைத்துக் கொள்ளலாம் என்று மூர்த்தியிடம் கூறியிருந்தான்.

மூர்த்திக்கும் அதுவே சரி என்று பட்டது. அவனது அழைப்பிற்கிணங்கி அவன் கோஷ்டியினர் எல்லாம் திரண்டு வந்து விட்டனர். அந்த விசாலமான மாடி ஹால், மாணவர் களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது

புதன்கிழமை விசாரணையின்போது பாபுவின் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரனை சமர்ப்பிக்க பெருமளவு மாண வர்களைத் தன் பக்கம் திருப்பியிருந்தான் மூர்த்தி. அவனது பேச்சில் மயங்கிய, பாபுவின் கட்சியைச் சேர்ந்த சில மாண வர்கள் கூட அவன் பக்கம் சேர்ந்துவிட்டனர்.

இதையெல்லாம் வரவேற்று, இன்னும் பல முக்கியமான விஷயங்களைக் கூறப் போவதாக மூர்த்தி அறிவித்திருந்தான். ஆகவே அவன் கூறப் போவதைக் கேட்கப் போகும் ஆர்வம் மாணவர்களின் முகத்தில் பொங்கிவழிந்து கொண்டிருந்தது.

ஹாலின் மத்தியில், ஒரு தலைவருக்கு உரிய மரியாதை யுடன் போடப்பட்டிருக்கும் மேஜையின் முன் மூர்த்தி அமர்ந் திருந்தான்.

ஒ. மா.-3