பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


அந்த சஸ்பென்ஸை உரிய நேரத்தில் உங்களிடம் நம் முதல்வரே விளக்குவார். ஆனல் மூர்த்திக்கு ஆபத்தோ, அவமானமோ எதுவும் நம்மால் ஏற்பட்டதல்ல; அவன் விதைத்த வினையை அவன்தானே அறுவடை செய்தாக வேண்டும்?

மாணவர்களே ! உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கி றேன். அன்போடு பழகுங்கள் - உண்மையொடு உயருங்கள்ஒற்றுமையோடு வாழுங்கள். M

தவறு செய்வது மனித சுபாவமாக இருக்கலாம்; ஆளுல் செய்த தவறுக்காக வருந்துவது அதை எண்ணித் திருந்து வது-உயர்ந்த மனித சுபாவமல்லவா?

அடிபட்ட சுப்பையாவிடம், காலங்கடந்தாவது மனம் திறந்து மூர்த்தி, ஸாரி, என்று ஒரு வார்த்தை சொல்லி யிருந்தாலே போதும். பிரச்னை அப்போதே தீர்ந்திருக்கும் என்பதற்காகவே சொன்னேன். ஆளுல் அதற்கு மனம் வேண்டும். அன்பைப்பெற வேண்டுமானல், அன்பைத்தான் அதற்கு விலையாகக் கொடுத்தாகவேண்டும். ஆகவே அனை வரும் அன்போடு பழகுங்கள் என்று கூறி என் உரையை முடிக்கிறேன்' என்று வார்டன் தன் பேச்சை நிறுத்தினர்.

7 அறுவடை நேரம்

'உண்மைகள் எல்லாவற்றையும் நீங்கள் சொல்ல வேண்டும் என்பதில்லை. நீங்கள் சொல்லுபவை எல்லாம் உண்மையாக இருக்கட்டும்.'

-ஹொரேஸ்மான்.

கல்லூரியில் வகுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது மூர்த்தி கட்டிடத்திற்கு வெளியே மறைவாக ஒரு இடத்தில் அமர்ந்து பாபுவுக்கு எதிரான