பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


மாணவர்களே, தவருன இடத்தில் ஒரு பாதையைக் குறுக்கே கடந்த அந்தப் பாதசாரியைக் கண்டிக்க ஒரு போலீஸ்காரர்தான் வருவார். அவர் வருவதும் பாதசாரியின் நன்மைக்காகவேதானே. அவர் செய்த தவறைச் சுட்டிக் காட்டி, நீங்கள் இப்படிக் கண்ட இடத்தில் ரோட்டைக் கடந்தால் உயிருக்கல்லவா ஆபத்து ஏற்படும், ஏன் கடந்தீர் கள்?’ என்று எச்சரிக்கை செய்த போலிஸ்காரரைப்பார்த்து "அதைக் கேட்க நீர் யாரைய்யா?’ என்று பாதசாரி கேட் டாலே தமாஷ்தான். ஆளுல் அதையும் மீறி அந்த பாதசாரி 'ஐ.ஜி வந்து சொல்லட்டும் கேட்டுக் கொள்கிறேன். நீ யார் என்னைத் தடுக்க?' என்று துடுக்காகப் பேசி அத்துடன் அந்தப் போலீஸ்காரரையும் அதற்காக அடித்தும் விட்டால் பிறகு விஷயம், ஐ.ஜி வரை போகாவிட்டாலும், ஸ்டேஷன் வரையாவது போய்த்தானே தீரும்?’’

அந்தப்பாதசாரி செய்த தவறைத்தான் மூர்த்தியும் செய்தான். 'நாம் செய்ததை இந்த பாபுவும் வார்டனும் என்ன விசாரிப்பது - இவர்களுடைய வார்த்தைக்கு நாம் என்ன கட்டுப்படுவது?-என்கிற மூர்த்தியின் ஆணவமான எண்ணந்தான் அவனை அதற்கு மேலும் அடுக்கடுக்கான தவறுகளைச்செய்யத் துாண்டி இன்று அதில் அவனே மாட்டிக் கொள்ளும்படி அது ஒரு ஆபத்தான-அவமானமான நிலைமை யையும் தோற்று வித்து விட்டது. பாவம், அது அவனுக்கே கூடத் தெரியாது என்று வார்டன் கூறிக் கொண்டிக்கும் போதே, பல மாணவர்கன் எழுந்து ' என்ன சார் செய் தான்? எப்படி சார் மாட்டிக்கொண்டான்?’ என்று கேள்வி கேட்டனர்.

வார்டன் அவர்களை நோக்கி கையமர்த்தியபடி, 'மூர்த்தி என்ன செய்தான், எப்படி ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிருன் என்பதைப் பற்றி யெல்லாம் நான் ஏதும் சொல்ல மாட்டேன். அவனுக்கே இதுவரை தெரியாம லிருக்கிற விஷயத்தைப் பற்றி நான் உங்களிடம் விளக்க லாமா! அது ஒரு சஸ்பென்ஸ்.”

{-.LDIT . يرته