பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


இதோ அடுத்தபடியாக நமது வார்டன் உங்களுடன் பேசப் போகிறர் அவருடைய இனிய பேச்சுக்கும் உங்களுக்கும் இடையே இனி நான் நிற்பது அழகல்ல, வணக்கம் என்று கூறியபடி பாபு தன் ஆசனத்தில் அமர்ந்தான். W

'அன்புள்ள மாணவர்களே, பாபு இத்தனை நேரம் மிக விரிவாக உங்கள் மத்தியிலுள்ள பிரச்னைகளை விளக்கிக் கூறி விட்டார். இனியும் நான் அதிக நேரம் பேசி உங்கள் நேரத்தை விளுக்க விரும்பவில்லை. வார்டன் என்கிற முறை யில் ஓரிரு வார்த்தைகள் கூறி என் உரையை முடித்து விடு கிறேன்’ என்கிற பூர்வ பீடிகையுடன் வார்டன் தமது உரையைத் துவக்கினர்:

இங்கு ஒன்று கூடியிருக்கும் நாமெல்லோரும் உருவத் தால் மனிதர்களாயிருப்பினும் நம் ஒவ்வொருவர் உள்ளத் திலும் விதம் விதமான கருத்துகளும் கருத்து வேறு பாடு களும் குற்றம் குறைகளும் இருப்பது சகஜமே.

ஆளுல் அப்படிப்பட்ட குற்றம் குறைகளுக்கான தீர்ப்பை, அல்லது தண்டனையை தாமே வழங்க முற்பட்டு விடாமல் உரியவர்களிடம் விட்டு விடவேண்டும். கட்டுப் பாடாக அப்படி நடந்துகொள்ளாமல் அதிகாரத்தை அல்லது ஆதிக்கத்தை நாமே கையில் எடுத்துக்கொண்டுவிடும் போதுதான் பிரச்னைகள் தோன்றுகின்றன. வன்முறைகள் உருவாகின்றன. அராஜகம் அல்லது அழிவு ஏற்படுகிறது.

கட்டுப்பாடாக நடந்து கொள்ளுவது என்பது கெளரவக் குறைவோ கையாலாகாத தனமோ ஆகிவிடமாட்டாது.

மூர்த்தி கோஷ்டியினரின் ஹாஸ்டல் விவகாரம் அவனுக்கு மேலுள்ள செகரட்டரி, வார்டன் ஆகிய இருவர் களாலேயே தீர்த்து வைக்கப்பட்டிருக்க முடியும். அதற்கு மூர்த்தி சற்று விட்டுக் கொடுத்து பொறுமையைக் கையாண்டிருந்தாலேபோதும். சுப்பையா அப்படியொன்றும் பொல்லாதவனல்ல; வார்த்தைக்குக் கட்டுப் படாதவனு மல்ல; விவகாரமும் அன்றே தீர்ந்து போயிருக்கும்.