பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


'இனிமேல் அப்படி எல்லாம் நடக்காது சார்’’.

பாபுவின்மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டுவிடுகிறேன்.

மூர்த்தியின் இந்த வார்த்தைகளைக்கேட்டதும் முதல்வர் தன்னுள் பொங்கி எழுந்த கோபத்தை அடக்க மாட்டாமல், 'முட்டாளே உன்னுடைய புகாரையும் வாபஸையும் பற்றி யார் கேட்டார்கள். காணுமல் போன அந்தப் பொருட்களுக்கு என்ன பதில் சொல்லுகிருய்?* என்று கேட்டார்.

உடனே மூர்த்தி, ‘என்னைக் கேட்டால், எனக்கு என்ன சார் தெரியும்?’ என்று கூறி முடிக்குமுன், திருட்டு ராஸ்கல்’ என்று முதல்வர் மூர்த்தியைப் பார்த்து அதட்டிய கத்தல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

பாபுவும், மற்றும் அங்கு கூடியிருந்த அனைவருமே ஒரு கணம் பயந்து விட்டனர். முதல்வருக்கு இப்படியொரு கோபம் வந்து அவர்கள் யாருமே அத்தனை நாளில் பார்த் ததே இல்லை. அந்த வீடே கணநேரம் நிசப்தத்தில் மூழ்கி யிருந்தது.

முதல்வர் தன்னுடைய கண்ணுடியைக் கழற்றி கைக் குட்டையால் கண்கள், வெற்றி, முகம் எல்லாம் துடைத்துக் கொண்டார். அந்தச் செய்கைகளின் மூலம் அவர் தன்னையும் மீறி உணர்ச்சி வசப்பட்டுவிட்டதற்காக வருந்துவது போல் இருந்தது.

மிகவும் தனிந்த குரலில் கையிலிருந்த முக்குக்கண்ணுடி யைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே தன்னு டைய தவறை உணர்ந்ததும், தானே வருந்தித் திருந்து பவன் முதல்ரகம் தன் தவறைப் பிறர் உணர்த்தும்போது உணர்ந்து மனம் திருந்துபவன் இரண்டாம் ரகம்; தவறை யும் செய்துவிட்டு கடைசிவரை சாதித்துக் கொண்டு கை யும் மெய்யுமாகப் பிடிபட்டவுடன் மட்டுமே காலைப்பிடித்துக் கொள்ளும் மூன்ருவது ரகத்தைச்சேர்ந்தவன் முர்த்தி நீ.