பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


நான் எத்தனை மறுத்தும் கேளாமல் நண்பர் பாபு என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார். காட்டாருக வாழ்ந்து பழகிப் போன நான், எப்படி ஒரு இனிய நீரோடையாக மாற முடியும் என்று எனக்கே புரியவில்லை. என்னைப் பொறுத்த வரையில் பாபு இந்த விதத்தில் என்னைத் தண் டித்து விட்டதாகவே தோன்றுகிறது.

என் நண்பர்களிடம் இறுதியாக ஒரு வேண்டுகோள் விடுத்து என் உரையை முடித்துக் கொள்கிறேன். இப்போ துள்ள நம்முடைய நல் மாணவர் சங்கம், புதிய நல் மாணவர் சங்கம் ஆகிய பெயர்கள் நீக்கப்பட்டு அனைத்தும் ஒரே சங்கமாகச் செயல் பட வேண்டும்.

அந்தப் புதிய சங்கத்திற்கு பாபுவின் பெயரை வைக்க வேண்டுமென்பது என் விருப்பம். ஆனால் அதை நிச்சயமாக பாபு எதிர்ப்பான் என்பது எனக்குத் தெரியும். ஆனல் பாபு வால் எதிர்த்துப் பேசவேமுடியாத ஒரு பெயரை நம் சங்கத் திற்கு நான் சூட்டப் போகிறேன். அதன் பெயர் 'பாபுஜி மாணவர் சங்கம்’ ன்பதே என்று மூர்த்தி கூறியபடியே பாபுவை இறுகத் தழுவிக் கொண்டான். மாணவர்களின் கை தட்டல், பல நிமிஷங்களுக்கு நிற்கவே இல்லை. அந்த ஒசையில் ஒரு புதிய நம்பிக்கை பிறந்தாற்போல் கல்லூரி தலை நிமிர்ந்து நின்றது.