பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98. சு.சமுத்திரம் 0

களுக்கும் ஒரு இது இருக்கு. கரெட்டா... பகல் பதினோரு மணிக்கு அவங்க சைக்கிள்ள மூட்டை மூட்டையா போகும் பாரு...! இப்போ...எவ்வளவு சரக்கு தேறும்னு வேவு பார்க்க வந்திருக்கானுக... எனக்கு தெரிஞ்சு ஒரு கடைக்காரன் இந்த கடையிலேயே கள்ளச்சரக்கு வாங்கி 2 லட்சத்துல வீடு கட்டியிருக்கான். இன்னொரு வீடு கட்டப்போறான்."

'இன்னாமே...இது அநியாயமா கீது. யாருமே கேள்வி கேட்பாரில்லையா.. ? முன்னால கடைய நடத்தினவங்க இந்தப் பசங்கள விட எவ்வளவோ தேவலை.10 லிட்டர் கிருஷ் னாயிலுக்கு ஒன்பது லிட்டர்தான் தருவான். பன்னிரெண்டு கிலோ அரிசில பதினொன்னுதான் அளந்துப் போடுவான். ஆனா இந்தப் பசங்க கால்வாசியை அமுக்கிடுறாங்க."

இந்த சமயத்தில் சோதி மண்ணென்ணை டின்னோடு அங்கு வந்தாள். மோவாயில் கைவைத்து அவள் பேசவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அறுபது வயது ஆயா, இருபது வயது பெண்மாதிரி ஆடி.ஆடி..ஒரு பாட்டைப் பாடினாள்.

'கூட்டுறவு வாரம் கொண்டாட வாங்க.. சீ... இவனுக கெட்ட கேட்டுக்கு ரேடியோவில வேற விளம்பரம்."

'ஆயா.. பாட்டுக்கு இதுவா நேரம்?

"இது பாட்டுல்லமே ஒப்பாரி..."

ராக்கம்மா அக்னி மூச்சு விட்டபடியே பொதுப் படையாகக் கேட்டாள்.

நாமோ..சும்மா.. எத்தனைவாட்டிதான் பொறுத்துகறது. இதுக்கு ஏதாவது பண்ணணும். என்ன சொல்றே.சுமதி.?"

'சொல்றேன்...எங்க ஐயா. இவங்க ஆபீசுலதான் பெரிய ஆபீசரா வேலை பார்க்கறார். அவருக்கிட்ட இவனுக போடற