பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 99

ஆட்டத்த விலா வாரியா சொல்னேன். பதினோருமணி சமாச்சாரத்த பட்டுட்ன்னு புட்டு வைச்சேன். அதுக்கு எங்க அய்யா என்ன சொன்னாரு தெரியுமா..? நாம எல்லோரும் ஒன்னாச் சேர்ந்து சைக்கிள் பசங்களை மடக்கிப் பிடிச்சுகணுமாம். யராவது ஒருத்தர் எங்க ஐயாவுக்கு டெலிபோன்செய்யணுமாம்.என்னசொல்றே...செய்வோமா..?"

“உங்க ஐயாவ நம்பி இறங்கலாமா..? யார நம்பினாலும், ஆபீசர நம்பக்கூடாதுன்னு "அது" சொல்லும்."

"அது சொல்லுது இது சொல்லுதுனு கேட்காதடி... எங்க அய்யா நெருப்பு. ஆபீசருங்கள்லையும் அத்தி பூத்தாப் போல சிலர் இருக்கத்தான் செய்யறாங்க ஆனா, இருந்த இடத்திலேயே இருப்பாங்க... மேல போகவே மாட்டாங். எங்க அய்யாவும் அப்படித்தான்..அவர்க்கு கீழ இருந்தவனெல்லாம் மேலே போய்டானுங்களா"

"நானு மீனு வாங்க போகணும்மே என்ன செய்யனுமோ அதச் சீக்கிரமாச் சொல்லு"

"சரி.. இன்னிக்கே இந்த சோமாரிங்கள மடக்கிடலாம். கரெக்டா பத்தரை மணிக்கி நம்ம ராக்குவோட வீட்டுக்கு அல்லாரும் வந்திடுங்க.. இந்த லட்சுமிய பத்தரைமணி வாக்குல கடையில நீக்கச் சொல்லுவோம். சரக்கு ஏத்தும்போது லட்சுமி நம்பளண்ட வந்து சொல்லிடணும். நம்ம ஓடிப்போய் வளைச்சுகுவோம். ஆயா...நீ... ஏன் மூஞ்சிய திருப்பற. உன் பேத்திய அனுப்பற மேன்னா..? நல்லக் காரியததுக்குதானே அனுப்புறோம். எத்தனை பொம்மனாட்டிங்க..இவள காதலுக்குத் தூது அனுப்புறாங்க. ஆனாலும் கெட்டிக்காரி. ரொம்ப பேர சேர்த்து