பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 சு.சமுத்திரம்

வைச்சுட்டாள்."

'ஏய் விஷயத்துக்கு வா சுமதி....இந்தப் பசங்கள மடக்குற வேலய பொம்மனாட்டிங்க மட்டும் செய்ய முடியுமா..?"

"நாம போடுற சத்தத்துல ஆம்பளைங்களும் வந்திடமாட்டாங்ளா...?"

"நீ ஒருத்தி இந்தக் காலத்துல லேசா அடிதடிசத்தம்னா ஆம்பளைங்க தான் மொதல்ல வீட்டுக்குள்ள ஒடி கதவ சாத்துறானுவ... பொட்டப் பசங்க..."

"இப்படியே பேகினு நின்னா...அந்த பசங்கள பிடிச்சமாதிரிதான்"

எல்லாப் பெண்களும், பத்தரை மணிக்கு ராக்கம்மா வீட்டில் சந்திப்பது என்ற தீர்மானத்துடன் தத்தம் வீடுகளுக்குச் சென்றார்கள். ராக்கம்மாவும் மிகப்பெரிய காரியத்தைச் செய்யப்போகிற திருப்தியுடன் வீட்டை நோக்கி நடந்தாள். அக்கம்பக்கத்துப் பெண்களிடம் அடக்க முடியாதபடி சொல்லப்போனாள். பிறகு, எந்த முண்டை யாவது.. அந்த பசங்ககிட்டசொல்லிடப்படாதேன்னு நினைத்தபடியே வீட்டிற்குள் போனாள். வீட்டில் 'அது' சாராய மூச்சோடு தூங்கிக்கொணடிருந்தது. அதனையும், கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று நினைத்த ராக்கம் மாவுக்கு ஏமாற்றம். யோவ். உன்ன மாதிரி ஏழை எளிய வங்க சாராயம் குடிச்சு தன்பாடு சாராயம் பாடுன்னு இருக்க றாதாலத்தான் ஆபீசர் கம்மனாட்டிங்க அட்டுழியம் பண்ணுறாங்கோ. முதல்ல ஒன்ன நிக்க வைச்சு சுட னும்யா.," என்று சொன்னபடியே மூலையில் சாய்ந்தாள்.

ராக்கம்மா குடிசையில், எல்லாப் பெண்களும் பத்தேகால் மணிக்கெல்லாம் வந்துவிட்டார்கள்; சோதி மீன் வாங்காமலே வந்து விட்டாள். இதரப் பெண்களும்