பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

101

அப்படியே..ராக்கம்மா அங்கலாய்ப்போடு சொன்னாள்... 'ஒங்களுக்கு டீ கொடுக்க தேயிலைக்கீது..அஸ்காகீது... ஆனா கிருஷ்ணாயில்தான் இல்ல..மனசுக்கு கஷ்டமாகீது.. தோ... சுமதி வந்துட்டாளே." சுமதி, இரண்டு கைகளை நீட்டியபடி வந்தாள். அந்தக் கைகளில் அடுக்கடுக்காக பழைய பத்திரிகைகளும், வாரப்பத்திரிகைகளும் இருந்தன. 'எங்க அய்யா வீட்டு பழைய பேப்பருங்க.. கடைல போட்டுட்டு வரும் படியா எங்கம்மா சொன்னாங்க; அப்புறமா போட்டுக்கலாம். நம்ம லட்சுமி, சும்மா சொல்லக்கூடாது... அந்தப் பசங்களமாதிரி பராக்குப் பார்த்தபடியே கட முன்னாடி நிக்கறா' என்று சொன்னபடியே, அவள் கரங்களிலிருந்த பழைய பத்திரிகைகளை ராக்கம்மா வீட்டு தரையில் போட்டபோது ஒவ்வொருத்தியும், ஒவ்வொரு பத்திரிகையை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். ஒருத்திகையில் ரஜினிகாந்த் இரண்டு பக்க முனைகளில் கால் வைத்தபடி துப்பாக்கியோடு நிற்கும் டபுள்பேஜ் அட்வர்டைஸ்மென்ட். இன்னொரு பத்திரிகையில் விஜயகாந்த் கம்பைப்பிடித்துக் கொண்டு நிற்கும் கம்பீரமான விளம்பரம். போதாக்குறைக்கு டி.ராஜேந்தர் அநியாங்களை தொலைக்கப் புறப்பட்டது போன்ற தோரணயான படம். இந்தப் படங்களில் தமிழகத்தின் தலை விதியை தீர்மானிப்பது போன்ற சிங்கார வரிகள். இவர்கள் நடித்தபடங்களை, இப்போது பார்த்தால் தான் நாட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது என்பது போன்ற முடிவான வாசகங்கள். இதற்குள் ஒருத்தி, ஒரு வாரப் பத்திரிகைக்குள் முகம் புதைத்தாள். சிறிது நேரத்தில் அவள் முகம் ஆடியது. பிறகு கையிலிருந்த பத்திரிகை ஆடியது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த பத்திரிகையை மல்லாக்க வைத்தபடியே ஆவேசமாகக்