பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சு.சமுத்திரம்

கேட்டாள். "இதோ பாரடி சுமதி. இந்த கார்த்தி, சிரீபிரியாவ அம்போன்னு விட்டுட்டான் பாரு...பெருசா நடிக்கமட்டும் தெரியுது.. நம்புனவள நட்டாத்துல விட்டுட்டான் பாரு...பாவம் சிரீபிரியா...' 'பாவம் என்னடி பாவம். ஒரு தலப்பட்சகாதலுக்கு, நான் பொறுப்பில்லேன்னு கார்த்திதான் சொல்லீட்டானே...இதோ இந்த பேப்பரைப் பாரு...' 'இந்தப் பேப்பரைப் பாருடி.சிரீபிரியா எப்படி குமுறிச் சொல்லியிருக்கா பாரு..இந்த கார்த்திலலாம் ஒரு மனுசனா - - அட.. அவனையும் அவளையும் விடுங்கடி. சந்திரசேகருக்கு இரட்டைப்பிள்ளை பிறந்திருக்காம். ஆளப்பாத்தா எவ்வளவு அப்பாவியா இருக்கான் பாரு...' 'இங்க பாரடி. ராதிகாவுக்கும், விஜயகாந்துக்கும் இஸ்க்கு தொஸ்க்காம்...நான் படத்தப் பாக்கும்போதே நினச்சேன்.புருசன் பொண்டாட்டி கூட அப்படிக் கிடையாது...." இந்தச் சமயத்தில், சிறுமி லட்சுமி, வேர்க்க விருக்க ஓடி வந்தாள்.தலையிலிருந்தும், நெற்றியிலிருந்தும் பெருக்கெடுத்த வேர்வைத் துளிகள் கழுத்தில் அருவியாகி, தொண்டைக் குழியில் கடலானது.பேசப் போனாள்...மூச்சு முட்டியது.மூச்சை அடக்கி பேசப் போனால், வார்த்தைகள் முட்டின. மூச்சிழுக்க அவகாசம் கொடுத்து பேச வேண்டியதை தள்ளி வைக்க, அவளால் இயலவில்லை. கூப்பாடு போடுவது மாதிரியே அலறினாள். எக்கோ... எக்கோ அந்த அநியாய விலைக்கடையில ..அஸ்க்கா மூட்ட.. அரிசி மூட்ட. கிருஷ்ணாயில் டின்னு ன்னு...அல்லாத்தையும் ஒரு கட்டை வண்டிலே ஏத்திக்கி