பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

103

னுயிருக்காங்க ....கட்டையில போறவங்க... புறப்படுங்க... கஸ்மாலங்கள உண்டு இல்லன்னு பண்ணிடலாம்... சுமதிக்கா எயிந்திரி ...ராக்கத்தே புறப்படு....' "இவா ஒருத்தி..பேசாம குந்துடி..ஒரு தலக் காதலுக்கு, தான் பொறுப்பில்லேன்னு எப்படி இந்த கார்த்தி சொல்லலாம்.?" "எக்கோ, நான் புறப்படும் போதே பாதிய ஏத்திட்டாங்க.. இன்னேரம் கிளம்பிருப்பாங்க... ரோட்டைத் தாண்டிட்டா, சட்டம் பேசுவானுங்கோ...ஜல்தி.ஜல்தியாப் போயி மடக்குவோம்.எயிந்திரிங்க..."

சுமதியும், மற்ற தோழிகளும் காரசாரமான விவாதத்தில் இறங்கியதால், அந்தச் சிறுமியின் சத்தம், அந்த விவாதத்திற்கு ஒரு பின்னணி இசை போலவே அமைந்தது...ஆனாலும் லட்சுமி வயிறு முதல் வாய் வரை விம்மிப் புடைக்க கத்திய போது, ஒரு பளபளப்பான வாரப்பத்திரிகையை வைத்துக் கொண்டு, அதையே ஆதாரமாக, காட்டுவதுபோல்      முக்காலியின் மேல் அடித்தடித்து பேசினாள் சுமதி...

"ஏன் சொல்லப்படாது...கார்த்தி சொன்னதுல தப்பே இல்ல.... " எக்கோ....." 'சொம்மா கிடடி.ஆருதான் யோக்கியம்..ஏய் இங்க பாருங்கம்மே...அநியாயத்த தட்டிக் கேட்கிறதுதான் என் வேலைன்னு நம்ம சூப்பர்ஸ்டார் எப்படி சொல்லியிருக்கான் பாரு...' தொட்டால் கை வழுக்கும் அத்தனை பத்திரிகைகளும், நல்ல பாம்பு படமெடுத்ததுபோல் பக்கங்களை விரித்துக் காட்டிக் கொண்டிருந்தன. அவற்றின் உட்பக்கங்களோ புதை மணலாய் தோற்றங்காட்டின.