பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 சு.சமுத்திரம் 0

“புறப்படுங்கண்ணே... 'இயக்குநர் செம்மல்.’ அரூபசொருபன் , பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தோடு காத்திருக்கார்"

"முதல்ல உங்க இயக்குநர் எடுத்த படங்களோட பெயர்களைச் சொல்லு பாக்கலாம்..."

'என்ன அண்ணே... நீங்க? அவரு நாடறிந்த பேர்வழியாச்சே. வாடாவாத்தியாரே, போடாபோக்கிரி, 'ராத்திரி வேளை பூஜை', 'சவாலடா சவால்... இப்படி எல்லாமே நூறு நாள் தாண்டுன படங்கள எடுத்தவரு... இதனாலயே கலைமாமணி பட்டம் வாங்குனார். உங்க நாவலைப் படமாக்கி 'பத்மஸ்ரீ'பட்டம் வாங்கப் போறார்... புறப்படுங்கண்ணே..."

"ஒங்களுக்கும், எனக்கும் சரிப்படாதுப்பா... நீ புறப்படலாம்..."

"நீங்க நினைக்கிற மாதிரி ஒங்க நாவலை எடுக்க மாட்டா ரண்ணே... கலைப்படமா எடுக்கப் போறார்... நேசனல் அவார்டுக்கு குறி வைச்சிருக்கார்"

“ஒரு வாரம் டைம் குடு... யோசிச்சு சொல்றேன்" 

"கொஞ்சம் வர்றீங்களா..."
அந்த இளைஞன், நாற்காலியில் இடித்துவைத்த புளியாய் இன்னமும் இருந்தபோது, மயில்நாதன் சமையலறைக்குள் போனார்...
அந்தம்மா கைகளை உதறினார்... குக்கர் சூட்டில் கைபட்டது நிசந்தான்... ஆனால் அதற்காக மட்டும் இப்படி உதறி இருக்க மாட்டாள்... அவரைப் பார்த்ததும், எந்த உள்நோக்கமும் இல்லாமல் தன்பாட்டுக்கு சொல்வதுபோல் சொன்னாள்...