பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 131

"அய்யோ... அண்ணே... நீங்க ரொம்பத் துழாவுறிங்க... இருந்தாலும் சொல்றேன்... ஒரு நாவலைப் படிக்கோம்... அதுல ஒரு வித்தியாசமான மாமனார் கேரக்டர் வருதுன்னு வச்சுக்

கோங்க... அத சினிமாவிலே மாமியார் கேரக்டரா ஆக்கி டுவோம்... நீங்க எழுதுன உரையாடல்களை லேசா மாற்றி வசனங்களா ஆக்கிடுவோம்... இதுக்குப் பேரு உல்டா... இதே மாதிரி நாடகத்திலேயோ, இல்லன்னா வார பத்திரிகையிலோ வருகிற ஜோக்குகள, படத்துல அங்கங்க காட்சியா காட்டிடுவோம்... இதுக்குப் பேரு சொருகிறது... உல்டாவுக்கும், சொருகிறதுக்கும் பலரை வேலையில் வச்சிருக்கோம்... உங்களால எங்கள ஒண்ணும் செய்ய முடியாது..."

 அந்த இளைஞன் கண்ணைச் சிமிட்டினான். மறை முகமாக எச்சரிக்கை விடுகிறானோ... என்னவோ...
 மயில்நாதனுக்கு, கோபம் புரையேறியது... அவனைக் கூட ஒரு எதிரியைப் பார்ப்பதுபோல் பார்த்தார்... துடித்த உதடுகளை துண்டை வைத்து மூடிக் கொண்டே மனதை திறந்து பார்த்தார். ஒரு சில திரைப்படங்களை பார்த்திருக் கிறார். அவை தமது நாவல்களின் சாயலில் இருப்பதைக் கண்டிருக்கிறார். அவற்றின் வசனங்கள் கூட தனது நாவல் உரையாடல்கள் உயிர்ப்பிலிருப்பதை கேட்டிருக்கிறார்... அப்போதெல்லாம், கலையும் கற்பனையும் காற்று மாதிரி, எல்லோருக்கும் பொதுவானது தானே' என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்... ஆனால் இப்போதுதான் புரியுது... இவனுவ கலைஞர்கள் இல்ல... கொலைஞர்கள்...கயவாளிகள்... சிறையில் திணிக்க முடியாத கொள்ளைக்காரர்கள்...
மயில்நாதன் சினிமாக்

காரர்களை முணுமுணுத்து திட்டியபோது, அவன் அவசரப்படுத்தினான்.