பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 சு.சமுத்திரம் 0

வீட்டிலோ...

அந்த இளைஞன் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். பத்தாயிரம் ரூபாய் முன் பணத்தை, இயக்குநரிடம் வாதாடி, பதினையாயிரமாய் கூட்டிக் கொடுக்க வேண்டும்.
"தம்பி, என்ன விசயமா..." 
"என் பெயர் கலிங்கன். நீங்க எழுதுன நாவல் இருக்குதே 'பங்க மனிதன்,'அதை எங்க இயக்குனர் அரூபசொருபன் படமாக்குவது என்று தீர்மானிச்சுட்டார். ஹோட்டல் வாஞ்சியில் ரூம் போட்டு உங்களுக்காகவே காத்தி

ருக்கார்... புறப்படுங்கண்ணே... 'பங்க மனிதன்', நாவலையும் கொண்டு வாங்கண்ணே..."

'தம்பி... நீ தப்பா நினைச்சாலும், நான் சொல்லித்தான் ஆகணும்... மொதல்ல... ஒரு எழுத்தாளன் கிட்ட வரும்போது... நாவலைப் படிக்காட்டாலும், அதோட பெயரையாவது ஞாபகம் வச்சுக்கணும்... நான் எழுதியது 'மனித பங்கம்”...'
"கோபப் படாதீங்கண்ணே... ஏகப்பட்ட நாவல் படிக்கோமா... மேடையிலும், டி.வி.யிலயும் பலப்பல நாடகத்த பாக்கோமா... அதனால சில சமயம் ஒரு கதை இன்னொரு டைட்டிலுக்கு போயிடுது..."
"சினிமாக்காரங்க... அதிகமா படிக்க மாட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்...'
"தப்புண்ணேதப்பு... நாங்க பாக்காத நாடகங்கள் இல்ல... படிக்காத நாவல்கள் இல்ல... ஆனா உண்மையை ஒத்துக்கிறேன்... பொழுது போக்கிற்காக நாடகம் பாக்கல... ரசனைக்காக நாவல் படிக்கல... எல்லாம் உல்டாவுக்கும், சொருகுறதுக்குந்தான்..."

"அப்படீன்னா..."