பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 129

கிடந்த அந்த இளைஞனை அடையாளம் காண்பதுபோல், மயில்நாதன் நோட்டமிட்டார். இலக்கிய ரசிகனோ, அல்லது சிபாரிசுக்கு வந்த உறவுக்காரனோ...

 இவரைப் போலவே, அந்த இளைஞனும், அவர் தன்னைப் பார்க்காதபோது பார்த்தான்... எழுத்தாளர்களுக்கு இருப்பதாகக் கூறப்படும் வீட்டுக் கூரையை மேயும் கண்களோ, மோவாயை தடவும் கைகளோ இல்லாமல், இயல்பான கண்களோடு, இயற்கையான கையசைப்போடு, வல்லிக்கண்ணனைப் போல சர்வ சாதாரணமாக இருந்த அவரை, பார்த்ததும் அவன் மனம் குதிபோட்டது. இயக்குநர், அரூபசொருபனிடம், 'நீ கில்லேடிடா, என்று நல்ல பெயர் வாங்கிடலாம்... அவர், இவருக்குக் கொடுக்கத் தயாராய் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் அட்வான்சை ஐயாயிரமாகக் குறைத்து ஆசாமியை கோழியை அமுக்குவது மாதிரி அமுக்கி விடலாம்...

"நான் வந்துண்ணே..."

"முதல்ல. காபி குடிங்க, சூடு ஆறிடும்..."

தாய்மைக் குரலோடு தட்டில் உள்ள, காபி டம்பளர்களை, கணவனும், அவனும் எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, இருவர் பக்கமும் லேசாய் குனிந்து, நகர்ந்த, அந்த அம்மாவைப் பார்த்ததும், காபி டம்பளரில் அவன் கண்ணீர்த் துளி விழப் போவதுபோல் இருந்தது... எத்தனையோ சினிமாக்காரர்கள் வீட்டு வாசற்படிகளில் கால்சீட் பிச்சைக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடந்தவன்... அப்போ

தெல்லாம் இவனை வரவேற்பு அறைக்குள் வரவழைத்து, இவன் முன்னாலேயே சிக்கன் 65 துண்டுகளை கடித்த வாயோடு, இவனிடம் நிமிடக் கணக்கில் பேசி, எச்சில் பொங்க அனுப்பப் பட்டவன். ஆனால் இந்த