உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


புலித்தோல் போர்த்திய மாடுகள்



ணக்கம் அண்ணே, வணக்கம் அக்கா…’

ஊனுருகிப் பேசியது போல், வாசலுக்கு வெளியே உடல் குழைத்து நின்ற அந்த இளைஞனைப் பார்த்ததும், வெளியே பால்கனியில் நின்ற அந்த அம்மா, அவன் வணக்கத்தை ஒரு சின்னச் சிரிப்போடு ஏற்றுக் கொண்டு, உள்ளே வந்தாள். நாற்காலியில் காயப் போட்ட துண்டு, துக்கடாக்களை எடுத்துக் கொண்டே, படுக்கையறையில் எதையோ படித்துக் கொண்டிருந்த கணவனை உசுப்பினாள்… எதுவும் பேசாமல், வாசல் பக்கமாக, அவள் மோவாயை நீட்டிய போது, மயில்நாதன் வெளியே வந்தார்… அந்த இளைஞனை அடையாளம் காண்பது போல், விழி உயர்த்திப் பார்த்தார்… அதற்குள் அந்த இளைஞன், பாச மழை பொழிந்தான்.

“நான் வந்து அண்ணே…”

“முதல்ல உள்ளே வந்து உட்காரப்பா…”

பெல்பாட்டமும், தொள தொளப்பான பேண்ட்டும், அகலமாகக் காட்டினாலும், அதற்குள் நோஞ்சானாய் ஒட்டிக்