158
சு.சமுத்திரம் ❍
“பிரமனைக் குற்றம் சொல்வது நன்றன்று. தமிழ் இனத்தின் மேல் ஒரு சாபம் உள்ளது. கனக விசயர் சாபம்… இந்த இரு வட புலத்து மன்னர்களும், தமிழைப் பழித்தார்கள் என்பதற்காக, சேரன் செங்குட்டுவன், அவர்கள் தலைகளில் கற்களை ஏற்றிக் கொண்டு வந்தான். தற்குறிகளான கனக விசயருக்கு, தமிழை ஊட்டாமல், அவர்களைக் கேவலப்படுத்தி, அவன் இன மக்களை அசிங்கப்படுத்தி, கண்ணகி கோட்டம் அமைத்தான். அதுவும், இவர்களை நாவலந் தீவின் ஒரு பகுதியில் இருந்து, இன்னொரு முனைக்கு, கொடூரமாக நடத்திக் கொண்டு வந்திருக்கிறான்… ஆக, கனக விசயர் தலை சுமந்த கற்களில் ஒன்று, தமிழ் இனத்தின் மீதும் விழுந்தது. வீரத்தைக் காட்ட மனிதாபிமானத்தை பலியிட்ட தமிழினம், இதனால் பேடிகளாய் போய் விட்டது... இதில் நான் செய்வதற்கு ஏதுமில்லை...”
நாராயணன் கை விரித்த போது, அகத்தியர் இயலாமையால் கை நெரித்தார். ஆனாலும் வாதாடினார்.
“சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தால், தங்களுக்கும் சுகக் கேடு ஏற்படும் பிரபோ… தமிழகத்தில், பிறரின் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் ஒரு பயங்கரக் கும்பல், இங்கேயும் வரும்… நீங்கள், ஆதிசேசனை விட்டு ஒரு அடி நகர்ந்தால் போதும்… உடனே அந்த அதிரடிக் கும்பல்… பிரும்மனையும் மிரட்டி, பட்டா வாங்கி, இந்த ஆதிசேச அற்புதத்தை உரிமையாக்கிக் கொள்ளும்… இது இன்றைய தமிழக யதார்த்தம் பிரபுவே…”
தாயாரான லட்சுமி தேவி, திடுக்கிட்டு ‘எங்கேயும் செல்லாதீர்கள்’ என்பது போல், தனது நாயகனின் திருப் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்… லட்சுமணனாகவும், பலராமனாகவும் அவதாரம் மேற்-