பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Oஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 159

கொண்ட ஆதிசேசன், கோபத்தால் கண் சிவந்து, தனது அண்ட கோடி வாலை எடுத்து, பூலோகத்திற்கு குறிவைத்து கடலில் அடித்தது. அவ்வளவுதான்... பூமியில் பேய் மழை பெய்தது... அணுகுண்டு மேற்பரப்பில் வெடித்தது... பூகம்பங்கள் தோன்றின... அப்போதும், தமிழ் இனம், தொலைக்காட்சிப் பெட்டிகள் முன்னால், முத்தம் கொடுத்தது போல் பேசும் இளம் பெண்களின் அசைவுகளில் லயித்துக் கொண்டும், மேடைகளில் தலைவர்களின் கால்களில் தன் தலைகளைப் போட்டுக் கொண்டும், கிடந்தது... இதை தொலை நோக்காய் பார்த்து, அத்தனை பேரும் முகம் சுழித்தபோது, அகத்தியர் மீண்டும் விடாப்பிடியாய் கேட்டார்.

 'நற்பிறவி எடுத்து இழிபிறவியாய் போன என் இனத்தை மீட்டுக் கொடுங்கள் மேய்ப்பரே...'
 "சரி பிள்ளாய்... காலம் கனியட்டும்... விரைவில் மீண்டும் தமிழகத்தில் எனது அவதாரம் எடுத்து... உன் மக்களை மீட்கிறேன்..."உலகத்திற்கெல்லாம் ஒவ்வொரு அவதாரமாக எடுத்த யாம் தமிழகத்திற்காக மட்டும், தனி அவதாரம் எடுக்கவேண்டும்."

"நன்றி பிரபோ... நன்றி... நான் தன்யனானேன்... ஆனாலும், அதிகப் பிரசங்கித்தனமாய், நான் சொல்வதாய் நினைக்காதீர்கள் அலங்காரப் பிரியரே... ஒங்கள் அவதாரம், தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும்...அது சாகச நாய கனாய்... காதல் மன்னனாய்... பலரைக் கொல்லும் நாயகனாய்... மலைவிட்டு மலைகுதிக்கும் மாவீரனாய் நடிக்க வேண்டும். இல்லையானால், கோவிந்தனான நீங்களே கோவிந்தா ஆவீர்கள்... இன்னும் ஒரே ஒரு கேள்வி கேட்க அனுமதி வேண்டும் பிரபோ... காலம் கனிவதை...