பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

0 ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 161

நடிக்கும்... இவைகளுக்கு தமிழக மக்கள் பயபக்தியோடு ரசிகர் மன்றங்களைத் தோற்றுவிப்பார்கள்... காலப்போக்கில் இந்த நடிப்புப் பிராணிகளில் ஒன்று குறிப்பாக ஒரு பன்றி முதலமைச்சராகும். எஞ்சியவை அமைச்சர்களாகவும், சர்வகட்சித் தலைவர் களாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரி களாகவும் பதவி ஏற்கும். இப்படிப்பட்ட காலத் தோற் றத்தில், நான் கண்டிப்பாய் அவதாரம் எடுப்பேன். நல்லது... சென்று வா அகத்தியா... நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு போய் வா பேத்தியே..."

 நாரணர், இனிப் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதுபோல் யோக நித்திரையில் ஆழ்ந்தார்...
 பயங்கரமான புலி ஒன்று மாட்டு மந்தைக்குள் சென்று ஒரே ஒரு மாட்டை மட்டும் தனிப்படுத்தி, அதைத் தாக்குவதுபோல், ஊழ்வினை என்னும் புலி மனித இனங்களுக்குள் பாய்ந்து தமிழினத்தை மட்டும் தனிப்படுத்தி அதைத் தாக்குவது கண்டு, பிரமனை சிறை செய்து, அவன் ஏவி விட்ட அந்தப் புலியையும் வீழ்த்த நினைத்த முருகன் இப்போது வேலாலேயே தன் தலையில் அடித்துக் கொண்டான்... இன்றைய தமிழ் இனம் இதை விட மோசமான இழிநிலைக்கு போகப் போகிறதே என்று பொருமினான்... பிறகு, தான் தமிழ் கடவுள் அல்ல என்று பிரகடனம் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டான். தமழன்னை அங்கிருந்து போக மறுக்கிறாள்... அகத்தியர் மீண்டும் வடபுலத்திற்கு போகலாமா என்பது போல் யோசிக்கிறாள்.       -வாசுகி பொங்கல் மலர்-1996