பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் o

       அன்னை இட்ட தீ
           முன்னால் பூனைக்கார தடாலடிகளும், பின்னால் யூனிபார தடியடிகளும், அக்கம் பக்கத்தில், உப்பு, புளி, மிளகாய், வெங்காய வாரியக்காரர்களும் புடை சூழ அந்த தலைமை சமையலாளிப் பெண், அந்த சமையல் வளாகத்தின் வாசல்படியில் வலது கால் வைத்தார்... மறுகாலான இடது காலை வைப்பதற்கு தலை கிடைக்காமல் அங்குமிங்குமாய் சினம் பொங்கப் பார்த்தார்... அவ்வளவுதான்...
  முட்டைகளைப் பச்சையாகக் குடிக்கலாமா, அல்லது வேக வைத்து தின்னலாமா என்று யோசித்துக் கொண்டும், முட்டைகளுக்கும் சீல் போட்டுவிடக் கூடாதே என்று பயந்து கொண்டும் கிடந்த உதவி சமையலாளிப் பெண், அம்மாவைப் பார்த்ததும் ஆடிப் போனார். இந்தச் சமையல் கூடத்திலிருக்கும், ஒரே ஒரு உதவிச் சமையலாளிப் பெண் இவர்தான்... அம்மா என்று சும்மா சும்மா அழைக்கப்படும் தலைமைச் சமையலாளியைப் பார்த்ததுதான் தாமதம், முன்னால் அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளுக்கு மேல் உடம்பைப் போட்டு, அம்மாவின் கால்களில் தலையைப் போட்டார்... அதே சமயம் வயிற்றுக்கு வெளியே சேலை மறைப்பில் ஒளித்து வைத்த பதுக்கல் முட்டைகள் -