பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

o ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 163

நசுங்காமல் இருப்பதற்காக எச்சரிக்கையாக வயிற்றை மட்டும் தரையில் படாமல் எக்கி வைத்துக் கொண்டார்... எல்லாத் தலைமைச் சமையல்காரர்களிடமும், சரக்கு மாஸ்டராக இருப்பதற்கென்றே பிறப்பெடுத்த, "கல் தோன்றி, மண்தோன்றாக்காலத்தே முன்தோன்றி மூத்த அந்த கம்பீரமான சரக்கு மாஸ்டர், இப்போது எரியும் விறகின் சாம்பல் போல, நேராய் நிற்காமலும், கீழே விழாமலும் வளைந்து நின்றார்... மீன்குமார், மீன் குவியலில் இருந்து விடுபட்டு, அம்மாவை நோக்கி சாமியாடினார்... பல்வேறு சின்னச் சின்ன சமையல் கூடங்களையும், பால் கொடுக்கும் மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் முதல் பயிர் வளரும் நஞ்சை நிலங்களையும், மடக்கிப் போட துணை போகும் ஒரு ஒல்லிச் சமையலாளி, இதர சமையல்காரர்கள் முண்டிய டித்ததில் கீழே விழாமலிருக்க ஒரு ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கினார்... இன்னொரு சமையல் காரர் கழுத்தில் கடந்த சிலுவையை எடுத்து அம்மாவைப் பார்த்தபடியே கண்களில் ஒற்றிக் கொண்டார். குல்லாய் போட்ட இன்னொரு சமையல்காரர், அம்மா இருக்கும் திசைதான் மெக்கா இருக்கும் திசை என்று அனுமானித்து அங்கேயே மண்டியிட்டார்... தாயே, தாயே, என்ற குரல்களைக் கேட்டு பிச்சைக்காரன்கூட தன் லெவல் பெரிது என்று பெருமிதப்படலாம்... ஆனாலும், இந்த குரல்கள் வெளியே போய்க் கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்ப்பதற்காக நிற்க வைத்தது. இந்த வேடிக்கையாளர்கள் அந்த தலைமைச் சமையல்காரரையும், அவரது உதவியாளர்களையும், அதிசயமாய்ப் பார்த்தபோது-

 காட்டா மோட்டா உடையோடு, கம்பீரமாக நின்ற, அந்த அம்மா சமையலாளி, காலடியில் தலைபோட்டுக் கிடந்த பெண் உதவிச் சமையல்காரியை ஒரு அங்குலத்தில் பத்தில்