பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 சு.சமுத்திரம் 0

ஒரு பங்கு கூட கீழே குனிந்து பார்க்காமல், முகத்தை ஆறு அங்குல உயரத்தில் தூக்கி கொண்டு சுற்று முற்றும், பார்த்தார்........ அவரது பார்வையில்-

  முன்பு ஒரே சமையல்கூடமாக இருந்து, இப்போது இரண்டாக தடுக்கப்பட்ட சமையல் கூடங்கள் பட்டன... முதலாவது சன் மைக்கா போட்ட தளம். இதில் வெள்ளி அடுப்பு... சந்தனக்கட்டை விறகுகள்... தங்கப் பானை... ஆங்காங்கே அமுல் பேபிக் காய்கறிகள்... கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான பளபளப்பு அரிசி ரகங்கள்... முந்திரிக் கொட்டைகள்... ஆறுபோல் பெருக்கெடுத்த பால்... பனி மலையாள நெய்க்குவியல்... முக்கனிகள்... அறுபத்தி நாலு வகையான ஆகார வகையறாக்கள்...
 அந்த தலைமைச் சமையலாளியின் கண்கள் பிரகாசித்தன... அதே சமயம் ஒவ்வொரு உதவிச் சமையலாளியின் முதுகுக்குப் பின்னால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும், இந்த வகையறாக்களை அதே கண்கள் பங்காளித்தனமாகவும் பார்த்தன. பிறகு அந்தக் கண்கள் கள்ளிச் செடிகூட முளைக்காத கட்டாந்தரையில் உள்ள சாமானிய சமையல் கூடத்தில் வைக்கப்பட்ட அழுகிப் போன காய்களையும், பால் கலந்த தண்ணணீரையும், மோட்டாரக தானியங்களையும் புகைமுட்டும் அடுப்பையும் பார்த்தன... பிறகு கம்பீரம் குலையாமலே வெள்ளைக்காரன் கட்டிப் போட்ட அந்த சமையல் கூடத்தை மேலும் கீழுமாகப் பார்த்தன. இது உருவாக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் காண்ட்ராக்ட், கமிஷன் பூகம்பங்களால் சுண்ணாம்புத் தடயம்கூட இல்லாமல் போய்விட்டன... ஆனால் இந்தக் கட்டிடம் மட்டும், இன்னும் மார்க்கண்டேயத்தனமாகவே உள்ளது. காலப்போக்கில் ஏற்பட்ட பெளதிக ரசாயன சேர்க்கையால்,