பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

O ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும் 165

இதன் தேக்குக் கம்புகளே, இரும்புப் பட்டைகளானது போன்ற பரிணாம மாற்றம் ... புதுவைக்கு அருகே காவக்கரையில், காலச்சிற்பியால் கணக்கெடுக்க முடியாத வயதுள்ள மரங்கள், கற்களாய் உருமாற்றம் செய்யப் பட்டுள்ளனவே- அது மாதிரி.

 கால் மணி நேரமாக அம்மாவின் கால்களில், முகம் போட்டுக் கிடந்த உதவிச் சமையல்காரிக்கு, முதுகு வலித்தது.ஆகையால் அங்குமிங்குமாக நெளிந்தார்... இதனால் வயிற்றுக்குள் பதுக்கி வைத்த முட்டைகள் உடைந்து, கூழாகி அம்மாவின் கால்களை நனைத்தன... உடனே, அம்மாவும் தனது செருப்புக் காலால் உதவிச் சமையல்காரியின் நெற்றியை பிராண்டிவிட்டு, அருவெறுப் போடு இரண்டடி நகர்ந்தார். ஆனாலும் அந்தப் பெண் இரண்டே கால் அடி வரை பாம்புபோல் நகர்ந்து பிறகு அம்மாவின் காலடியில் தலையைப் போட்டுவிட்டு, அப்புறம், போட்டதலையை பாம்புத்தலைபோல் நிமிர்த்திக் கொண்டு, அந்த அறையே குலுங்க இப்படி முழங்கினார்.
 "அம்மா... என் அம்மா... தங்கம்மா... தமிழம்மா... பிரபஞ்சத்தின் பேரண்ட முட்டையே இதோ பாரம்மா... இந்த முட்டைகள் உன் தரிசனத்தால் எப்படி நெகிழ்ந்து விட்டன என்று... உங்கள் வரவால் ஏற்பட்ட மகிழ்ச்சியை எப்படி பீறிட்டுக் காட்டுகின்றன என்பதைப் பாருங்கள் தாயே... பாருங்கள்... இந்த முட்டைகளின் வெள்ளைப் பிர வாகம், நீ களங்கமற்றவள் என்பதை கட்டியம் கூறுகிறது. இந்த மஞ்சள் பெருக்கோ. நீஉயிரின் உள்ளொளி என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. என் சொல்வேன்... என் செய்வேன்... இந்த மாதிரி அதிசயம் எப்போதுமே நடந்ததில்லை... இதனால்தானே ஆன்றோரும், சான்றோரும் உன்னை அதிசயத்தாய் என்கிறார்கள் தாயே!”